முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிவகாசி நகராட்சிக்கு ரூ.5கோடியில் புதிய கட்டிடம் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி நேரில் ஆய்வு

வியாழக்கிழமை, 1 பெப்ரவரி 2018      விருதுநகர்
Image Unavailable

சிவகாசி, - சிவகாசி நகராட்சிக்கு ரூ.5கோடியில் கட்டப்பட உள்ள புதிய கட்டிடம் கட்டும் பகுதியை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி நேரில் ஆய்வு செய்தார்.

சிவகாசி நகராட்சி அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் கட்டுவதற்காக, அரசு உள்கட்டமைப்பு இடைவெளி நிரப்புதல் திட்டத்தின் கீழ் ரூ.5 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. சிவகாசி வேலாயுதரஸ்தா சாலையில் புதிய கட்டிடம் கட்டுவதிற்கு இடம் தோ்வு செய்யப்பட்டது. பல்வேறு காரணங்களால் அந்த இடத்தில் நகராட்சி அலுவலகம் கட்டும் திட்டம் கைவிடப்பட்டது. தற்போது சிவகாசி-திருவில்லிபுத்தூர் சாலையில் பெரியகுளம் கண்மாய் அருகே நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் புதிய நகராட்சி அலுவலக கட்டிடம் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. பயன்பாடு இன்றி உள்ள பயணிகள் விடுதியை அகற்றிவிட்டு புதிய நகராட்சி அலுவலகம் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆணையாளர் அலுவலகம், மன்ற கூட்டம் அலுவலகம், கழிப்பறை வசதிகள், பார்வையாளர் அறை, வரி வசூல் மையம் உட்பட பல்வேறு அறைகள் நவீன முறையில் கட்டப்பட உள்ளது. நகராட்சிக்கு புதிய அலுவலகம் கட்டும் பகுதியை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி நேரில் சென்று ஆய்வு செய்தார். பணிகளை விரைவில் துவங்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். ஆய்வி்ன் போது சிவகாசி கோட்டாட்சியர் தினகரன், தாசில்தார் ஸ்ரீதர், முன்னாள் நகர்மன்ற துணைத்தலைவர் அசன்பதூரூதீன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் புதுப்பட்டி கருப்பசாமி, அதிமுக நிர்வாகிகள் மயில்சாமி, சந்தணமாரிப்பாண்யன், பைபாஸ் ராமசாமி மற்றும் அரசு அதிகாரிகள் உடனிருந்தனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து