முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்குவதற்காக நேர்முக தேர்வு கலெக்டர் ரோஹிணி ரா.பாஜிபாகரே ஆய்வு

புதன்கிழமை, 7 பெப்ரவரி 2018      சேலம்

சேலம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்குவதற்காக நேர்முக தேர்வினை கலெக்டர் ரோஹிணி ரா.பாஜிபாகரே,    ஆய்வு மேற்கொண்டார்.

 நேர்முக தேர்வு

மாவட்ட மாற்றுத்திறனாளிகளின் நலத்துறையின் மூலமாக மூன்று சக்கர பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கும் திட்டத்தின் கீழ் பயனாளிகள் நேர்முக தேர்விற்காக சேலம் மாவட்டத்தை சார்ந்த 535 மாற்றுத்திறனாளி மனுதாரார்கள் அழைக்கப்பட்டனர். இந்த நேர்முக தேர்வு கலெக்டர்  தலைமையில் புனர்வாழ்வு உடலியல் மருத்துவர், வட்டார போக்குவரத்து அலுவலர் மற்றும்  மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஆகியோர்களைக் கொண்டு நேர்முக தேர்வு நடத்தப்படுகிறது. நேர்முக தேர்வில் தேர்வு செய்யப்படும் பயனாளிகளுக்கு அரசு ஒதுக்கீடு பெறப்பட்டு மூன்று சக்கர பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கப்படும். மாற்றுத்திறனாளிகள் எந்த வித சிரமமும் இன்றி நேர்முக தேர்வில் கலந்து கொள்வதற்கு தேவையான வசதிகளை செய்திடுமாறு மாற்றுத்திறனாளிகள் நல அலுவலருக்கு கலெக்டர்  அறிவுறித்தினார்கள். இந்நிகழ்ச்சியில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் தங்கமணி, புனர்வாழ்வு உடலியல் மருத்துவர் இரா.ஸ்ரீலதா, வட்டார போக்குவரத்து அலுவலர் சேலம் மேற்கு தா.தாமோதரன் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து