பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் தேர்வு முறைகேடு வழக்கின் முக்கிய குற்றவாளி உட்பட 5 நபர்கள் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது

வெள்ளிக்கிழமை, 9 பெப்ரவரி 2018      சென்னை

சென்னை பெருநகரில் குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை கண்டுபிடித்து கைது செய்யவும், குற்றச் செயல்கள் நடவாமல் தடுக்கவும் பல்வேறு குற்றத் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், சென்னை பெருநகரக் காவல் ஆணையாளர் உத்தரவின்பேரில், தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்கள் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

 சிறையில் அடைப்பு

 அதன்படி 1.ஷேக்தாவூது, /35, /பெ.நூர்அகமது, எண்.97, வரலட்சுமி நகர், மதுரவாயல், என்பவர் மீது மத்தியகுற்றப்பிரிவு சைபர் கிரைம் பிரிவிலும் 2. ரமேஷ், /25, /பெ.குமரன், எண்.131, 5 வது தெரு, தாமோதரன் நகர், வியாசர்பாடி என்பவர் மீது பி-3 வியாசர்பாடி காவல் நிலையத்திலும் 3.கார்த்திக், /28, /பெ.நட்சத்திரம், எண்.300,சாமந்திபூ காலனி, வியாசர்பாடி என்பவர் மீது வியாசர்பாடி காவல் நிலையத்திலும் 4.சரண் () சரண்ராஜ் வ/30, /பெ.புருஷோத்தமன், எண்.320, சாமந்திபூ காலனி, வியாசர்பாடி ஆகிய மூவர் மீது பி-3 வியாசர்பாடி காவல் நிலையத்திலும் 5.அரவிந்தன், /24, /பெ.முருகன், எண்.21, திரௌபதி அம்மன் கோயில் 3 வது தெரு, காந்தி ரோடு, வேளச்சேரி என்பவர் மீது ஜெ-4 கோட்டூர்புரம் காவல் நிலையத்திலும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேற்படி, குற்றவாளிகள் 5 பேரும் தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்ததால், சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளர்கள் பரிந்துரை செய்ததன்பேரில், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் மேற்படி குற்றவாளிகள் 5 பேரையும் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார். அதன்பேரில் மேற்படி குற்றவாளிகள் 5 பேரும் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதில் குற்றவாளி ஷேக்தாவூது, பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் தேர்வு முறைகேடு சம்பந்தமான வழக்கின் முக்கிய குற்றவாளி ஆவார். ரமேஷ், கார்த்திக், சரண் () சரண்ராஜ் ஆகிய மூவர் மீது வியாசர்பாடி காவல் நிலையத்தில் கொலை வழக்கு உள்ளது. அரவிந்தன் மீது ஜெ-4 கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் கொலை மற்றும் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து