முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கை உள்ளாட்சித் தேர்தல்: ராஜபக்சே கட்சி அமோக வெற்றி

ஞாயிற்றுக்கிழமை, 11 பெப்ரவரி 2018      உலகம்
Image Unavailable

கொழும்பு : இலங்கையில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் முன்னாள் அதிபர் ராஜபக்சே தலைமையிலான இலங்கை மக்கள் முன்னணி கட்சி ஒட்டுமொத்தமாக 45 சதவீத வாக்குகள் பெற்று மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கையில் 341 உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நேற்று முன்தினம் நடந்தது. இலங்கையில் உள்ள 24 நகராட்சி கவுன்சில்கள், 41 ஊரக கவுன்சில்கள், 275 பிரதேசிய சபாக்கள் என பல்வேறு உள்ளாட்சி அமைப்பகளுக்கும் நேற்று தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் மொத்தம் 1.6 கோடி வாக்காளர்கள் வாக்களித்தனர்.

இதில் முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் ஸ்ரீலங்கா பொதுஜன பெருமுனா கட்சி அல்லது இலங்கை மக்கள் முன்னணி, அதிபர் சிறிசேனாவின் ஸ்ரீலங்கா சுதந்திரா கட்சி, தமிழ்தேசிய கூட்டமைப்பு, விக்ரமசிங்கேயின் ஐக்கிய தேசிய கட்சி ஆகியவற்றுக்கு இடையே கடும் போட்டி நிலவியது.

நேற்று காலை முதல் வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், 81 கவுன்சில்களுக்கான தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதில் முன்னாள் அதிபர் ராஜபக்சவின் ஸ்ரீலங்கா பொதுஜன பெருமுனா(எஸ்எல்பிபி) கட்சி 51 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

ராஜபக்சவின் கட்சி 7,03, 117 வாக்குகள் பெற்று 909 இடங்களையும், ஐக்கிய தேசிய கட்சி 4,69, 986 வாக்குகளைப் பெற்று 459 இடங்களையும் பெற்றதாக 'டெய்லி மிரர்' செய்தி தெரிவிக்கிறது. ஒட்டுமொத்தமாக ராஜபக்சவின் கட்சி 45 சதவீத இடங்களைக் கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதிபர் சிறிசேனவின் இலங்கை மக்கள் கட்சி, பிரதமர் ரணில் விக்ரமசிங்கேயின் ஐக்கிய தேசிய கட்சி ஆகியவை கடும் பின்னடைவைச் சந்தித்துள்ளன.

விக்ரமசிங்கேயின் ஐக்கிய தேசிய கட்சி 10 இடங்களையும், தமிழ் தேசிய கூட்டமைப்பு 10 இடங்களிலும் வென்றுள்ளன.

கடந்த 2015-ம்ஆண்டு நடந்த அதிபர் தேர்தல் தோல்விக்கு பின் ராஜபக்சே கட்சிக்கு மீண்டும் மக்கள் ஆதரவு அளித்துள்ளனர். இவருக்கு அங்குள்ள சிங்கள, புத்தமத சமூகத்தினர் பெரும்பான்மையானவர்கள் ஆதரவு இந்த தேர்தலில் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

முன்னாள் அதிபர் ராஜபக்சே தனது ஆதரவாளர்களுக்கு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், ''இந்த வெற்றியை மிகவும் அமைதியாக கொண்டாடுங்கள்'' எனத் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து