நத்தம் பகுதியில் இலந்தைபழம் சீசன்

திங்கட்கிழமை, 12 பெப்ரவரி 2018      திண்டுக்கல்
- ELLANTHAIPALAM 12 2 18

 நத்தம்,-  திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியில் மா,பலா,கொய்யா,சப்போட்டா,பப்பாளி,வாழை உள்ளிட்ட பல்வேறு பழவகைகள் அவ்வப்போது விளைச்சல் பெற்று அறுவடையாவது வழக்கம். தற்போது இலந்தைபழம் சீசன் தொடங்கி உள்ளது. இதில் மலையூர்,முளையூர்,வத்திபட்டி,பரளி,லிங்கவாடி,உலுப்பகுடி,சிறுகுடி,மணக்காட்டூர்,கரந்தமலை அடிவாரம் உள்ளிட்ட பல்வேறு கிராமபகுதிகளில் இலந்தைமரங்கள் ஆங்காங்கே விவசாயிகளால் பராமரிக்கபட்டு வருகிறது. மேலும் இந்த மரத்தை பெரும்பாலும் யாரும் பயிரிடுவது கிடையாது. தானாக முளைத்து தானாக வளர்ந்து பலன்தர கூடியது. வருடம் ஒரு முறை மகசூல் தரும் தன்மையுடையது.
       இப்படிபட்ட இந்த இலந்தைமரத்தின் பழங்கள் எந்தவிதமான பக்கவிளைவுகள் இல்லாமல் எல்லோரும் விரும்பி சாப்பிடும் பழமாக கருதபடுகிறது. முழுக்கமுழுக்க முள்ளால் ஆன இந்த மரத்தில் பழம் பழுத்ததும் அதற்கான அலக்கு அல்லது மூங்கில்குச்சியுடன் இணைக்கபட்ட வாங்கருவால் கிளையுடன் மரத்திலிருந்து பழங்களை பறித்து குறுங்கூடைகளில் அடைக்கபட்டு விற்பனைக்கு அனுப்பி வைக்கபடுகிறது. பஸ்களில் வெளியூருக்கு ஏற்றி செல்லும்போது கூடையில் இருக்கும் இலந்தைபழம் வாசனை பஸ்சில் பயணம் செய்யும் அனைவருடைய முக்கையும் துளைத்துவிடும்.
    மேலும் இந்த பழம் இனிப்பு,புளிப்பு,துவர்ப்பு-,போன்ற சுவைகளால் நிறையபெற்றது. தவிர இந்த மாதம் தொடக்கத்தில் தொடங்கிய சீசன் மார்ச் முதல் வாரம் வரை நீடிக்கும். ஒருபடி இலந்தைபழம் ரூ.80க்கும் கால்படி ரூ.20க்கும் விற்பனையாகிறது. இந்த பழத்தை பள்ளி மாணவ,மாணவிகள் மட்டுமல்லாமல் சிறியவர்கள் முதல் பெரியவர் வரையிலும் விரும்பி வாங்கி சாப்பிட்டு செல்கின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து