முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வ.உ. சிதம்பரனார் துறைமுகத்தில் உற்பத்தி திறன் வார துவக்கவிழா கொண்டாட்டம்

திங்கட்கிழமை, 12 பெப்ரவரி 2018      தூத்துக்குடி

வ.உ. சிதம்பரனார் துறைமுகத்தில் உற்பத்தி திறன் வார விழா நிர்வாக அலுவலகத்தில் மிக விமர்ச்சியாக நடைப்பெற்றது.

உற்பத்தி திறன் வார விழா

இவ்விழாவில் மூத்த துணை போக்குவரத்து மேலாளார் டி.எஸ். அசோக்குமார், வரவேற்புரையாற்றியதோடு 2018 ஆம் ஆண்டுக்கான உற்பத்தி திறன் வார விழாவில் நடைபெற இருக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளை எடுத்துரைத்தார். இவ்விழாவின் சிறப்பு விருந்தினர் இந்திய கடலோர காவல்ப்படை மற்றும் துறைமுக சபை உறுப்பினர், வ.உ. சிதம்பரனார் துறைமுக பொறுப்புக் கழகம்  எஸ். பி. வெங்கடேஸ், தலைமை அதிகாரி தனது சிறப்புரையில்; துறைமுக சார்ந்த தொழில்துறைகளில் முக்கிய கட்டமைப்பு மாற்றமானது சமீப ஆண்டுகளில் உலகலவில் நடைபெற்று வருகிறது. வணிக செயல்முறை தகவல் மற்றும் தொழில்நுட்பங்களின் வர்த்தக செயல்முறையானது வர்த்தக நுகர்வோர் கருத்தாகத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும் அவர் ஒட்டு மொத்த போக்குவரத்து தளவாடங்களை ஒருங்கிணைப்பதற்கு இணையதங்கள் சார்ந்த தொழில்நுட்பங்களை பயன்படுத்த வேண்டும் என்று கூறினார். துறைமுக சபை உறுப்பினர் ஆர். ரசல், மற்றும் வ.உ. சிதம்பரனார் துறைமுகப் பொறுப்புக்கழக துணை பாதுகாவலர்,  கேப்டன் பபாடோஸ் சந்த், வாழ்த்துரை வழங்கினார்கள். இவ்விழாவின் இறுதியில் மூத்த துணை போக்குவரத்து மேலாளர் ஜீ. எடிசன் நன்றியுரை வழங்கினார். வ.உ. சிதம்பரனார் துறைமுகத்தில் உற்பத்தி திறன் வார விழா 13.02.2018 முதல் 18.02.2018 வரை தேசிய உற்பத்தி கழகத்தின் அறிவுறுத்தலின்படி கொண்டாடப்படுகிறது. தேசியளவில் கொண்டாடப்படும் இவ்உற்பத்தி திறன் வார விழாவின் வைர விழா கொண்டாட்டமாக இவ்வாண்டில் ‘தொழில் புரட்சி 4.0 - இந்தியாவிற்கான சீர்மிகு வளர்ச்சி வாய்ப்புகள்‘ என்ற தலைப்பில் அனுசரிக்கப்டுகிறது. இந்த விழாவின் ஒரு பகுதியாக துறைமுக ஊழியர்களுக்கான கட்டுரை, சுலோகம் எழுதும் போட்டி மற்றும் பேச்சுப் போட்டியும் நடைபெறும். மேலும் துறைமுக உபயோகிப்பாளர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள் மற்றும் துறைமுக அதிகாரிகள் அனைவருக்கும் தனித்தனியாக உற்பத்தி மேம்படுத்துதல் பற்றிய கருத்தரங்கம் நடைபெற உள்ளது. நிறைவு விழா 18.02.2018 அன்று நடைபெறும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து