முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வரும் மார்ச் 1-ம் தேதி முதல் ரயில்களில் முன்பதிவுப் பட்டியல் ஒட்டப்படாது - தெற்கு ரயில்வே அறிவிப்பு

வியாழக்கிழமை, 15 பெப்ரவரி 2018      இந்தியா
Image Unavailable

சென்னை : வரும் மார்ச் 1-ம் தேதி முதல் தெற்கு ரயில்வேக்கு உட்பட்ட ரயில்களில் பயணிகளுக்கான முன்பதிவு இருக்கை, படுக்கை குறித்த பட்டியல் ஒட்டப்படாது என ரயில்வே அறிவித்துள்ளது.

பயணிகள் கோரிக்கை...

இதனால், சென்னை எழும்பூர், சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் ரயில்களிலும் முன்பதிவு பட்டியல் ஒட்டப்டாது. ஆனால், முன்பதிவு பட்டியல் ஒட்டும் முறை தொடர வேண்டும் என பயணிகள் தரப்பில் கோரிக்கையாக இருக்கிறது.

டிஜிட்டல்முறைக்கு...

ரயில்வே துறையில் காகிதத்தின் பயன்பாட்டையும், அதனால் ஏற்படும் செலவையும் குறைக்கும் நோக்கிலும், டிஜிட்டல்முறைக்கு மாறும் முயற்சியிலும் ரயில்வே துறை ஈடுபட்டு வருகிறது. இதற்காக முன்பதிவு பட்டியல் குறித்த அறிக்கை ஒட்டுவதை கடந்த 3 மாதங்களாக சோதனை முயற்சியாக சென்னை சென்ட்ரல், புதுடெல்லி நிஜாமுதீன், மும்பை சென்ட்ரல், ஹவரா ரயில் நிலையங்கள் செய்து பார்க்கப்பட்டது. அது வெற்றிகரமானதையடுத்து, இப்போது பரவலாக அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

6 மாதங்களுக்கு...

இதன்படி, மார்ச் 1-ம் தேதி முதல் தெற்கு ரயில்வேக்கு உட்பட்ட ஏ1, ஏ மற்றும் பி கிரேடு ரயில் நிலையங்களில் இருந்து புறப்படும் ரயில்களில் முன்பதிவு குறித்த அறிக்கை அடுத்த 6 மாதங்களுக்கு ஒட்டப்படாது என கடந்த 13ம்தேதி ரயில்வே துறைக்கு ரயில்வே வாரியம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

ஏற்கனவே அமுலில்...

இதன் மூலம், எக்ஸ்பிரஸ், மெயில், சதாப்தி, ஹம்சபர், துரந்தோ, ராஜ்தானி, கரீப் ராத் எஸ்பிரஸ் ஆகிய ரயில்களில் முன்பதிவு பட்டியல் ஒட்டப்படாமல் இயக்கப்படும். அதற்கு பதிலாக முன்பதிவு செய்த பயணிகளுக்கு அவர்களின் செல்போனுக்கு எஸ்எம்எஸ் அனுப்பப்படும். இந்த திட்டம் மார்ச் 1-ம் தேதி முதல் முறைப்படி அறிமுகப்படுத்தப் பட்டாலும், தெற்கு ரயில்வே சார்பில் சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும் சில ரயில்களில் ஏற்கனவே இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

பயணிகள் எதிர்ப்பு...

தமிழகத்தில் உள்ள 40 ரயில் நிலையங்களில் ஏ1 ரயில் நிலையங்களான சென்னை சென்ட்ரல், எழும்பூர், கோவை, மதுரை ஆகியவை உள்ளன. மற்றவை ஏ மற்றும் பி பிரிவு ரயில்நிலையங்களாகும். இந்தஅனைத்து ரயில் நிலையங்களில் இருந்து புறப்படும் ரயில்களில் இனி முன்பதிவு சார்ட் ஒட்டப்படாது. ரயில்வே துறையின் இந்த நடவடிக்கைக்கு பயணிகள் மத்தியில் பெரும் எதிர்ப்பு உருவாகியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து