முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோச்சடையான் படத்துக்காக வாங்கிய கடன் ரூ. 6.5 கோடி கடனை 3 மாதத்தில் செலுத்த லதா ரஜினிக்கு சுப்ரீ்ம் கோர்ட் உத்தரவு

செவ்வாய்க்கிழமை, 20 பெப்ரவரி 2018      சினிமா
Image Unavailable

புது டெல்லி : நடிகர் ரஜினிகாந்தை வைத்து அவரது மகள் சவுந்தர்யா இயக்கிய கோச்சடையான் படத்துக்காக லதா ரஜினிகாந்த் வாங்கிய கடனை 3 மாதத்தில் திருப்பிக் கொடுக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

நடிகர் ரஜினிகாந்தை வைத்து அவரது இளைய மகள் சௌந்தர்யா கோச்சடையான் என்ற 3 டி அனிமேஷன் படத்தை இயக்கினார். ஆனால் இந்த படத்திற்கு ரசிகர்கள் வரவேற்பு அளிக்காததால் படம் தோல்வி அடைந்தது. இதனால் படம் தயாரித்தவர்களுக்கு கடும் நஷ்டம் ஏற்பட்டது.

இந்தப் படத்தை விநியோகம் செய்ததில் லதா ரஜினிகந்த் வாங்கிய ரூ.10 கோடி பணத்தை திரும்ப தராமல் மோசடி செய்ததாக கடந்த 2015-ம் ஆண்டு சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஆட் பீரோ தனியார் நிறுவன நிர்வாகி அபிர்சந்த் நாகர் புகார் மனு அளித்தார்.

ஆனால், லதா ரஜினிகாந்த் மீதான குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்து கோச்சடையான் படத்தின் தயாரிப்பாளரான மீடியா ஒன் குளோபல் நிறுவனம் விளக்கம் தெரிவித்திருந்தது. அதில், இப்பட பரிவர்த்தனைகளில் லதா ரஜினிகாந்த் ஒரு போதும் தலையிடவில்லை என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கில் உயர் நீதிமன்ற தீர்ப்பை அடுத்து ஆட் பீரோ சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது சுப்ரீம் கோர்ட் நீதிபதி லதா ரஜினிக்கு சில கேள்விகளை வைத்தார்.

வாங்கிய பணத்தை ஏன் திருப்பித் தரவில்லை? எப்போது கொடுப்பீர்கள் என்று இன்றே(நேற்றே) பதிலளிக்க வேண்டும். பணத்தை திருப்பித் தராவிட்டால் குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்து, மதியத்திற்கு மேல் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை தள்ளி வைத்தார். மதியத்திற்கு பின்னர் மீண்டும் விசாரணைக்கு வந்த போது 12 வாரங்களில் பணத்தை திருப்பி தந்து விடுவதாக தெரிவிக்கப்பட்டது. அதை ஏற்றுக்கொண்ட சுப்ரீம் கோர்ட் 3 மாதத்திற்குள் பணத்தை திருப்பித் தர உத்தரவிட்டது.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து