முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வங்கிகளில் மோசடி செய்த கோடீஸ்வரர்களை விரட்டிப் பிடிப்போம்: அருண் ஜெட்லி உறுதி

புதன்கிழமை, 21 பெப்ரவரி 2018      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, வங்கிகளில் மோசடி செய்தவர்கள் எங்கு ஓடி ஒளிந்தாலும் அவர்களை விரட்டிப் பிடித்து அரசு நடவடிக்கை எடுக்கும் என மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.

நாட்டையே உலுக்கி வருகிறது பஞ்சாப் நேஷனல் வங்கி கிளையின் உத்தரவாத கடிதம் மூலம் 11 ஆயிரத்து 400 கோடி ரூபாய் மோசடி செய்த மும்பை வைர வியாபாரி நீரவ் மோடி விவகாரம். இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி, நிதி அமைச்சர் அருண் ஜெட்லி எதுவும் பேசாமல் அமைதி காத்ததையடுத்து எதிர்கட்சிகள் குற்றம்சாட்டி வந்த நிலையில், வங்கிகளில் மோசடி செய்த கோடீஸ்வர்களை விரட்டிப் பிடித்து தண்டனை வழங்கப்படும் என்று மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

வங்கிகளின் செயல்பாட்டு முறை முதலீட்டாளர் மற்றும் கடன்பெறுவோரிடையே பரஸ்பர நம்பிக்கையை அடிப்படையாக கொண்டது .மோசடியாளர்கள் எங்கு ஓடி ஒளிந்தாலும் அவர்களைத் விரட்டிப்பிடித்து உரிய தண்டனை பெற்றுத் தரப்படும். - அருண் ஜெட்லி

ஆசிய பசிபிக் நிதி நிறுவனங்களின் மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய அருண் ஜெட்லி, நடைபெற்ற குற்றத்தை உரிய நேரத்தில் கண்டறிய வங்கி நிர்வாகம் தவறி விட்டதாகவும் கூறிய ஜெட்லி, வியாபாரிகளின் மோசடிகளை ஏன் ஆடிட்டர்கள் முன்கூட்டியே கண்டுபிடித்து வங்கிகளையும் அரசையும் எச்சரிக்கவில்லை என்று கேள்வி எழுப்பினார்.

மேலும் ஏழு ஆண்டுகளாக பஞ்சாப் நேஷனல் வங்கியில் இந்த மோசடி தொடர்ந்து நடைபெற்று வந்ததையும் அவர் சுட்டிக்காட்டினார். கடைசியாகத்தான் இந்த மோசடி அரசுக்குத் தெரிகிறது என்று வேதனை வெளிப்படுத்திய ஜெட்லி, விதிமுறைகள் மீறலை கண்டறிய தணிக்கையாளர்களும் தவறிவிட்டனர். இனி இதுபோன்ற மோசடிகளை முன்கூட்டியே கண்டறிய உரிய நடைமுறைகளை கண்காணிப்பு அமைப்புகள் உருவாக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து