முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாட்டுத்தீவன ஊழல் வழக்கு: லல்லு பிரசாத்துக்கு ஜாமீன் வழங்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு

வெள்ளிக்கிழமை, 23 பெப்ரவரி 2018      இந்தியா
Image Unavailable

ராஞ்சி: மாட்டுத்தீவன வழக்கில் ரூ.900 கோடி ரூபாய் ஊழல் தொடர்பாக கைது செய்யப்பட்டிருக்கும் லல்லு பிரசாத்திற்கு ஜாமீன் வழங்க ஜார்கண்ட் சுப்ரீம் கோர்ட் மறுப்பு தெரிவித்துள்ளது.

ஊழல் காலத்திலேயே லல்லு பிரசாத், பீகாரின் முதல்வராகவும், நிதி அமைச்சராகவும் இருந்துள்ளதால் அவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டுள்ளது என நீதிபதி அபரேஷ் குமார் சிங் கூறியுள்ளார். அனைத்து மோசடி ஊழல்களுமே அவரது தலைமையின் கீழ் நடந்துள்ளது. இதனால் அவருக்கு ஜாமீன் மறுக்கப்படுகிறது என  நீதிபதி கூறினார்.

சிறை தண்டனை...
“சிபிஐ சிறப்பு நீதிமன்றம் கடந்த வருடம் டிசம்பர் 23-ம் தேதி மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் கைதான லல்லு பிரசாத்தை குற்றவாளி என தீர்ப்பளித்து 3 ஆண்டுகள் 6 மாதம் சிறைத்தண்டணை விதித்தது. இதனால் லல்லு ராஞ்சி பிஸ்ரா முண்டா சிறைச்சாலையில் டிசம்பர் 23-ம் தேதி முதல் சிறைவசம் இருந்து வருகிறார். அவர் இதுவரை மூன்று வழக்குகளில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு தண்டனை பெற்று வருகிறார்.

ரூ.184 கோடி ஊழல்
2013-ம் ஆண்டு செப்டம்பர் 30-ம் தேதி சாய்பாஷா கருவூலம் தொடர்பாக ரூ.37.62 கோடி ஊழல் வழக்கில் லல்லு பிரசாத் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு 5 வருட சிறைத்தண்டனை அளிக்கப்படுவதாக தீர்ப்பு வழங்கப்பட்டது. இருப்பினும், அந்த வழக்கில் ஜாமீன் பெற்று சிறையில் இருந்து வெளியேறினார். மேலும் தும்கா கருவூல தொடர்பாக ரூ.3.97 கோடி ஊழல் வழக்கையும், டொரன்தொ கருவூல தொடர்பாக ரூ.184 கோடி ஊழல் வழக்கையும் அவர் சந்திக்கவுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து