பெங்களூரு திரைப்பட விழாவில் இயக்குநர் மணிரத்னத்துக்கு வாழ்நாள் சாதனை விருது

திங்கட்கிழமை, 26 பெப்ரவரி 2018      சினிமா
mani-ratnam 2018 2 26

பெங்களூரு : பெங்களூர் திரைப்பட விழாவில் தமிழ்த் திரைப்பட பிரபல இயக்குனர் மணிரத்னத்துக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்து பெங்களூருவில் கர்நாடக திரைப்பட அகாடமி தலைவர் ராஜேந்திர சிங் பாபு கூறியதாவது,

பெங்களூரு சர்வதேச திரைப்பட விழாவில்திரைத்துறையில் சாதனை படைத்தவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட உள்ளது. இதற்காக 13 பேர் கொண்ட நடுவர் குழு தேசிய அளவில் திரை ஆளுமைகளை ஆராய்ந்து வாழ்நாள் சாதனையாளர் விருதுக்கு இயக்குனர் மணிரத்னத்தை தேர்வு செய்துள்ளது. மார்ச் 1-ம் தேதி நடக்கும் நிறைவு விழாவில், மணிரத்னத்துக்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா விருது வழங்கி கவுரவிக்கிறார். விருதுடன் ரூ.10 லட்சம் பரிசுத் தொகை, கேடயமும் வழங்கப்பட உள்ளது. மணிரத்னம் முதன்முதலில் கன்னடத்தில்தான் பல்லவி அனு பல்லவி என்ற படத்தை இயக்கினார். இவ்வாறு அவர் கூறினார்.


இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து