முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாமக்கல் மாவட்டத்தில் 3.53 லட்சம் பசு மற்றும் எருமை மாடுகளுக்கு 14-வது சுற்று கோமாரிநோய் தடுப்பூசி முகாம் கலெக்டர் மு.ஆசியா மரியம் துவக்கி வைத்தார்

வியாழக்கிழமை, 1 மார்ச் 2018      நாமக்கல்
Image Unavailable

 

நாமக்கல் மாவட்ட கால்நடைப்பராமரிப்பு துறையின் சார்பில் பசு மற்றும் எருமை மாடுகளுக்கு 14-வது சுற்று கோமாரிநோய் தடுப்பூசி முகாம் நாமக்கல், எலச்சிப்பாளையம் ஊராட்சி ஒன்றியம், மோர்காளிபாளையத்தில் நேற்று (01.03.2018) துவங்கப்பட்டது. கலெக்டர் மு.ஆசியா மரியம் ; தலைமையேற்று 14-வது சுற்று கோமாரிநோய் தடுப்பூசி முகாமினை துவக்கி வைத்து பேசும்போது தெரிவித்ததாவது,

துவக்கி வைத்தார்

 

பசு மற்றும் எருமை மாடுகளை தாக்குகின்ற நோய்களில் மிக கொடுமையான நோய் கோமாரி நோய் ஆகும். இந்நோய் தாக்கம் ஏற்படாமல் தடுப்பதற்கு நோய் வரும் முன் காத்திட பசு மற்றும் எருமை மாடுகளுக்கு 14வது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி போடும் சிறப்பு முகாம் நாமக்கல் மாவட்டம் முழுவதும் இன்று தொடங்கி வருகின்ற 2018 மார்ச்21 வரை நடைபெற உள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் மொத்தமுள்ள சுமார் 3.53 இலட்சம் பசு மற்றும் எருமை மாடுகளுக்கு 100 சதவீதம் முழுமையாக இத்தடுப்பூசி போடத் திட்டமிடப்பட்டுள்ளது.

கோமாரி நோய்

எனவே, நாமக்கல் மாவட்டத்தில் கால்நடை வளர்ப்போர் தாங்கள் வளர்த்து வரும் பசு மாடுகள், எருதுகள், எருமை மாடுகள் மற்றும் அவற்றின் மூன்று மாதத்திற்கு மேற்பட்ட கன்றுகள் ஆகிய கால்நடைகளை இக்கோமாரி நோய் தடுப்பூசி முகாமிற்கு அழைத்துச் சென்று இன்று (01.03.2018) முதல் ஒவ்வொரு கிராமத்திலும் குறிப்பிடப்பட்ட நாளில் குறிப்பிட்ட இடத்தில் நடைபெறும் முகாம்களில் தங்களது கால்நடைகளுக்கு கட்டாயம் கோமாரிநோய் தடுப்பூசி தவறாது போட்டுக் கொண்டு தங்கள் கால்நடைகளை நோய் வரும் முன் பாதுகாத்திட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு கலெக்டர் மு.ஆசியா மரியம் தெரிவித்தார்.

இம்முகாம் துவக்க நிகழ்ச்சியில் கால்நடைப் பராமரிப்பு மண்டல இணை இயக்குநர் டாக்டர்.சி.சீனிவாசன், உதவி இயக்குநர் டாக்டர்.கிருஷ்ணமூர்த்தி, கால்நடை உதவி மருத்துவர்கள் டாக்டர்.குமாரசாமி, டாக்டர்.ராஜேந்திரன், டாக்டர்.தட்சிணாமூர்த்தி, டாக்டர்.கவிதா, டாக்டர்.கமலக்கண்ணன், டாக்டர்.முத்துசாமி உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள், கால்நடை மருத்துவர்கள், கால்நடை வளர்ப்போர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து