ரஜினிகாந்த்தின் அடுத்த படத்திற்கு இசையமைக்கும் அனிருத் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு

ஞாயிற்றுக்கிழமை, 4 மார்ச் 2018      சினிமா
Anirudh

Source: provided

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் அடுத்த படத்திற்கு இசையமைக்க இளம் இசையமைப்பாளர் அனிருத் ஒப்பந்தமாகியிருக்கிறார்.

ரஜினி நடிப்பில் ‘காலா’ படம் வருகிற ஏப்ரல் 27-ஆம் தேதி ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பா.இரஞ்சித் இயக்கியிருக்கும் இந்த படத்தை தனுஷ் தனது வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார்.

அதேநேரத்தில் ரஜினியின் ‘2.0’ படமும் விரைவில் ரிலீசாக இருக்கிறது. கிராபிக்ஸ் பணிகள் நிறைவடையாததால் ரிலீஸ் தள்ளிப்போயுள்ளது. இந்நிலையில், ரஜினிய அரசியல் அறிவிப்புக்கு நடுவே, அவரது அடுத்த படம் குறித்த அறிவிப்பும் சமீபத்தில் வெளியானது.

அதன்படி ரஜினியின் அடுத்த படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்குகிறார். இந்த படத்தை சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. இந்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்க இருப்பதாக சில தகவல்கள் உலா வரும் நிலையில், இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க இருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

இதன்மூலம் ரஜினி படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பு முதன்முதலாக அனிருத்துக்கு கிடைத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் படப்பிடிப்பு வருகிற மே மாதம் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi

Rajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

Kili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2

Chippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2

Chippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து