முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முட்டை விலை சரிவு

சனிக்கிழமை, 10 மார்ச் 2018      வர்த்தகம்
Image Unavailable

கடந்த சில நாட்களாய் முட்டையின் விலை வரலாறு காணாத அளவு கிடுகிடுவென உயர்ந்து புதிய உச்சத்தில் இருந்தது. இந்நிலையில் நாமக்கல்லில் நேற்று நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் முட்டையின் கொள்முதல் விலையை குறைக்க முடிவு செய்யபட்டது. அதன் அடிபடையில் 3 ரூபாய் 70 காசுகளில் இருந்த முட்டையின் விலை 10 காசுகள் குறைத்து 3 ரூபாய் 60 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது.

இவ்விலை குறைவு குறித்து கோழிப் பண்ணையாளர்கள் கூறும் போது, பள்ளிகளில் தேர்வு துவங்கி உள்ள நிலையில் சத்துணவிற்கு முட்டை அனுப்புவது குறைந்து தேக்கம் ஏற்பட்டதோடு கேரளாவிலும் முட்டை நுகர்வு குறைந்து விற்பனை சரிவால்தான் விலையில் மற்றம் செய்ய  பட்டுள்ளதாகவும், இவ்விலை மேலும் குறைய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து