டி 20 தொடர்: இலங்கையுடன் இன்று இந்தியா 2-வது மோதல்

ஞாயிற்றுக்கிழமை, 11 மார்ச் 2018      விளையாட்டு
india 2nd clash 2018 3 11

கொழும்பு : கொழும்பு நகரில் இன்று நடக்கும் நிடாஹாஸ் கோப்பை டி20 தொடரின் 4-வது ஆட்டத்தில், இலங்கையை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதிபெறுவதை உறுதி செய்யும் கட்டாயத்தில் இந்திய அணி களம் இறங்குகிறது.

ஆனால், கடந்த சில போட்டிகளாக பார்ம் இழந்து தவிக்கும் ரோகித் சர்மா மீண்டும் இயல்பு நிலை பேட்டிங்குக்கு வருவது அவசியமானதாகும்.

இதுவரை 2 போட்டிகளில் பங்கேற்றுள்ள இந்திய அணி முதல் போட்டியில் இலங்கையிடம் தோல்வி கண்டது, ஆனால், 2-வது போட்டியில் வங்கதேசத்தை வீழ்த்தி நம்பிக்கை பெற்று இருக்கிறது. இந்நிலையில் இன்று நடக்கும் போட்டியில் இலங்கையை வீழ்த்தும் பட்சத்தில் இறுதிப்போட்டிக்குள் எளிதாக நுழையும் வாய்ப்பை இந்திய அணி பெறும். மேலும், இலங்கைக்கு எதிரான முதல்போட்டியில் செய்த தவறுகளை திருத்திக்கொள்வதற்கும் இந்த போட்டி ஒரு வாய்ப்பாகும்.

விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டநிலையில், ரோகித் சர்மாவின் கேப்டன்ஷிப்பில் விளையாடும் அணி 2-ம் தரத்துடனே பேட்டிங்கில் செயல்பட்டு வருகிறது.

குறிப்பாக 4-வது இடத்தில் களமிறங்கும் ரிஷாபா பந்த் இதுவரை 2 போட்டிகளில் களமிறங்கியும் தனது இருப்பையும், பேட்டிங் திறமையையும் வெளிப்படுத்தவில்லை. ஆதலால், தொடர்ந்து இவரை வைத்து சோதிப்பதற்கு பதிலாக நல்ல பேட்டிங் பார்மில் இருக்கும் கே.எல் ராகுலுக்கு இந்த போட்டியில் வாய்ப்பு வழங்கலாம்.

தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவன் சிறப்பான பார்மில் இருந்து வருகிறார். இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் 49 பந்துகளில் 90 ரன்கள், வங்கதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் 43 பந்துகளில் 55 ரன்கள் எடுத்து பேட்டிங்கில் மிரட்டி வருகிறார்.

தென் ஆப்பிரிக்கத் தொடரில்இருந்து தவனின் பேட்டிங் திறமை மெருகேறிக் கொண்டே வருகிறது. கடைசி 5 டி 20 போட்டிகளில் முறையே, 55, 90, 47, 24, 72 ரன்கள் குவித்துள்ளார் தவன் ஆதலால், தொடக்க ஆட்டம் வலுவாக இருக்கிறது.

ஆனால், கேப்டன் ரோகித் சர்மாவின் நிலை கவலைக்கிடமாக இருக்கிறது. தென் ஆப்பிரிக்கத் தொடரில் இருந்தே ஏதாவது ஒருபோட்டியில் மட்டுமே சிறப்பாக பேட்டிங் செய்கிறார். கடந்த 5 டி 20 போட்டிகளில் முறையே 17, 0, 11, 0,21 ரன்கள் மட்டுமே ரோகித் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஆதலால் இந்த ஆட்டத்தில் இழந்த பேட்டிங் திறனை மீட்பது ரோகித்துக்கு அவசியமாகும்.  நடுவரிசையில் களமிறங்கும் மணீஷ் பாண்டே, சுரேஷ் ரெய்னா, தினேஷ் கார்த்திக் ஆகியோர் தங்களின் பணியை சிறப்பாக செய்து வருகிறார்.

பந்துவீச்சில் உனத்கத், வாஷிங்டன் சுந்தர், யுவேந்திர சாஹல், விஜய் சங்கர் ஆகியோரின் பணி விமர்சிக்கும் விதமாக இல்லாமல் சிறப்பாக இருக்கிறது. இவர்களின் கூட்டணி இந்த போட்டியிலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கையைப் பொறுத்தவரை முதல் போட்டியில் இந்தியாவை வீழ்த்திய அந்த அணி வங்கதேசத்தை கட்டுப்படுத்த முடியாமல் தோல்வி கண்டுள்ளது. இலங்கை அணி விதித்த 215 ரன்கள் என்ற மிகப்பெரிய இலக்கை வங்கதேசம் சேஸ் செய்து பிரம்மாண்ட வெற்றி பெற்றுள்ளது. டி 20 போட்டிகளில் வங்கதேசத்தின் மிகச்சிறப்பான சேஸிங், வெற்றியும் இதுவாகும்.

அதிரடி ஆட்டம் ஆடிய முஷ்பிகுர் ரஹ்மான் 35 பந்துகளில் 72 ரன்கள் சேர்த்து இலங்கையை வீழ்த்த முக்கிய காரணமாக அமைந்தார்.  வங்கதேச வீரர்களின் ரன்குவிப்பை கட்டுப்படுத்த முடியா அளவுக்கு இலங்கையின் பந்துவீச்சு அமைந்துள்ளது வேதனையாகும். ஆதலால், அந்த அணியின் பந்துவீச்சும்மேம்பட வேண்டியுள்ளது.

அதேசமயம், குஷால் மெண்டிஸ், குஷால் பெரேரா ஆகியோரின் பேட்டிங் இந்திய அணிக்கு மிரட்டல் விடுக்கிறது. இவர்களை இந்திய பந்துவீச்சாளர்கள் தொடக்கத்திலேயே வீழ்த்துவது நல்லது.

அணிகள் விவரம்

இந்தியா: ரோஹித் சர்மா, ஷிகர் தவண், கே.எல்.ராகுல், சுரேஷ் ரெய்னா, மணீஷ் பாண்டே, தினேஷ் கார்த்திக், தீபக் ஹூடா, ரிஷப் பந்த், வாஷிங்டன் சுந்தர், யுவேந்திரா சாஹல், அக்சர் படேல், விஜய் சங்கர், ஷர்துல் தாக்குர், ஜெயதேவ் உனத்கட், முகமது சிராஜ்.

இலங்கை: தினேஷ் சந்திமால் (கேப்டன்), சுரங்கா லக்மல், உபுல் தரங்கா, குணதிலகா, குசால் மெண்டிஸ், தசன் ஷனகா, குசால் ஜெனித் பெரேரா, திஷாரா பெரேரா, ஜீவன் மெண்டிஸ், உதனா, அகிலா தனஞ்ஜெயா, அபோன்சோ, நுவன் பிரதீப், சமீரா, தனஞ்ஜெயா டி சில்வா.

11 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த 17 பேருக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்? பொதுமக்கள் கருத்து

Vaara Rasi Palan ( 22.07.2018 to 28.07.2018 ) | வார ராசிபலன் | Weekly Tamil Horoscope

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து