ஜப்பானில் 18,000 பேரை பலி வாங்கிய 7-ம் ஆண்டு சுனாமி நினைவு தினம்

திங்கட்கிழமை, 12 மார்ச் 2018      உலகம்
japan tsunami memorial 2018 3 12

டோக்கியோ : சுனாமி பாதிப்பின் 7-ஆம் ஆண்டு நினைவு தினம் ஜப்பானில் ஞாயிற்றுக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

ஜப்பானில் கடந்த 2011-ஆம் ஆண்டு மார்ச் 11-இல் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவு கோலில் 9.0 அலகுகளாகப் பதிவான அந்த நிலநடுக்கத்தையடுத்து பிற்பகல் 2.46 மணி அளவில் எழுந்த மிகப்பெரிய சுனாமி அலை, டோக்கியோ மற்றும் வடகிழக்கு கடற்கரையோரப் பகுதிகளை ஆக்ரோஷமாக தாக்கியது.

அதில், 18,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பல்லாயிரக்கணக்கான கட்டடங்கள், வாகனங்களை சுனாமி அலை விழுங்கியது. அத்துடன் புகுஷிமா அணு உலையும் பழுதடைந்தது.

பல்லாயிரக்கணக்கான மக்களின் இயல்பு வாழ்க்கையைப் புரட்டிப்போட்ட சுனாமி அலை பாதிப்பின் 7-ஆவது நினைவு தினம் ஜப்பானில் நேற்று முன்தினம் கடைபிடிக்கப்பட்டது. சுனாமி அலையில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் ஷின்úஸா அபே அஞ்சலி செலுத்தினார்.

11 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த 17 பேருக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்? பொதுமக்கள் கருத்து

Vaara Rasi Palan ( 22.07.2018 to 28.07.2018 ) | வார ராசிபலன் | Weekly Tamil Horoscope

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து