முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரியலூர் மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் : கலெக்டர் விஜயலட்சுமி தலைமையில் நடந்தது

திங்கட்கிழமை, 12 மார்ச் 2018      அரியலூர்
Image Unavailable

 

அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில், "மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் மு.விஜயலட்சுமி, தலைமையில் நேற்று (12.03.2018) நடைபெற்றது.

தொகுப்பு வீடுகள்

இக்கூட்டத்தில், முதியோர் உதவித்தொகை, அம்மா இருசக்கர வாகனம், இலவச வீட்டுமனைப்பட்டா, தொகுப்பு வீடுகள், திருமண நிதியுதவித் திட்டம் போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 293 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டு, இம்மனுக்கள் மீது சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார்கள்.

இக்கூட்டத்தில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 1 நபருக்கு ரூ.58,840- மதிப்பில் இணைப்பு சக்கரங்கள் பொறுத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டரையும், 3 நபருக்கு ரூ.9,888- மதிப்பில் பார்வையற்றோருக்கான நவீன ஒளிரும் மடக்கு குச்சிகளையும் மாவட்ட கலெக்டர் மு.விஜயலட்சுமி, வழங்கினார்கள். பின்னர், மாற்றுத்திறனாளிகள் வரிசையில் காத்திருக்காமல், அவர்களுக்கான தனி இருக்கையில் அமர்ந்திருந்த மாற்றுத்திறனாளிகளிடம் கோரிக்கை மனுக்களை பெற்று, அம்மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் மு.விஜயலட்சுமி, உத்தரவிட்டார்கள்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் சே.தனசேகரன், துணை கலெக்டர் (சமூகபாதுகாப்புதிட்டம்) .பூங்கோதை, மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் ஆர்.பாலாஜி மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து