முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரபல இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் காலமானார்

புதன்கிழமை, 14 மார்ச் 2018      உலகம்
Image Unavailable

லண்டன், கருந்துளை கோட்பாடுகளின் மூலம் பிரபஞ்சத்தின் புதிரை விடுவித்த, இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த பிரபல இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் தனது 76 வயதில் காலமானார்.

அனைவருக்கும் நன்றி

உலகின் தலைசிறந்த விஞ்ஞானிகளில் ஒருவரான  ஸ்டீபன் ஹாக்கிங் 76 வது வயதில் நேற்று காலமானார். அவரின் இறப்புச் செய்தியினை அவரின் குடும்பத்தினர் உறுதிபடுத்தியுள்ளனர். அவரின் பிள்ளைகளான லூசி, ராபர்ட், டிம் ஆகியோர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் 'எங்கள் அன்புமிகு தந்தை நேற்று காலமானார். அவர் பெரிய விஞ்ஞானி ; அசாதாரண மனிதர். அவரின் பெயரும் புகழும் காலம் கடந்து நிற்கும். அவருக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றி' என்று குறிப்பிட்டுள்ளனர்.

இயற்பியலாளர்

இங்கிலாந்திலுள்ள ஆக்ஸ்போர்டில் ஜனவரி 8, 1942ம் ஆண்டு பிறந்தவர் ஸ்டீபன் வில்லியம் ஹாக்கிங். இவருடைய தந்தையும் ஒரு இயற்பியலாளர், வெப்ப மண்டல நோய்கள் குறித்த ஆய்வை இவர் செய்தார். ஸ்டீபனின் தாயார் லிபரெல் கட்சியில் இருந்தனர். பள்ளியில் ஒரு சராசரி மாணவன்தான். ஆனால், ஏன்? எப்படி?, என்ற கேள்விகள் எதைப் பார்த்தாலும், எப்பொழுதும் அவனுள் எழுந்துகொண்டேயிருந்தது. அதற்கான விடைகளைத் தொடர்ந்து தேடத் தொடங்குகிறான். எல்லாவற்றிற்கும் மேலாக, இந்த உலகம் எப்படித் தோன்றியது என்ற பெரும் கேள்வி அவனுள் கனன்று கொண்டே இருந்தது.

குறைபாட்டு நோய்

1960 களில் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தார். அந்தச் சமயம் ஏ.எல்.எஸ். எனப்படும் ஆம்யோட்ரோபிக் லேடரல் ஸ்லோரஸிஸ் என்ற குறைபாட்டு நோயால் பாதிக்கப்பட்டார். கொஞ்சம், கொஞ்சமாக அவரின் உடல் உறுப்புகள் செயலிழக்கத் தொடங்கின. செயலிழக்கும் உறுப்புகளுக்கு ஈடான கருவிகளைத் தானே உருவாக்கி அதை ஈடு செய்து வந்தார்.  21 வயது இளைஞனைப் பரிசோதித்த மருத்துவர்கள் "இனி கை, கால்களை அசைக்க முடியாது. தானாக எதையும் செய்து கொள்ள முடியாது. வாய்திறந்து பேச முடியாது. வாழும் வரை சக்கர நாற்காலி மட்டும்தான் துணை. அதுவும் சில ஆண்டுகளுக்கு மேல் உயிர் வாழ்வது கடினம்" எனக் கைவிரித்து விட்டனர்.

சாதனை படைத்த ....

மருத்துவ உலகிற்கு மட்டுமல்ல, ஒட்டு மொத்த உலகிற்குமே அந்த இளைஞன் ஆச்சரியமளித்தான்.   அண்டப்பெருவெடிப்பு, கருந்துளை கோட்பாடுகளின் மூலம் பிரபஞ்சத்தின் புதிரை விடுவித்தார். "தி பிரீஃப் ஹிஸ்டரி ஆஃப் டைம்" என்ற அவரது புத்தகம் அதிக அளவு விற்பனையான புத்தகங்களில் ஒன்று என்ற சாதனையைப் படைத்தது. ஐசக் நியூட்டன் போன்ற மிகச்சிறந்த விஞ்ஞானிகளால் அலங்கரிக்கப்பட்ட கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் "லூகாஸியன் நாற்காலி" என்ற அதி கௌரவம் மிக்க பதவியும் அவரைத் தேடி வந்தது. இந்த நூற்றாண்டின் ஆல்பர்ட் ஐன்ஸ்டின்  என புகழப்பட்டவர்

டைம் மெஷின், பிளாக் ஹோல், ஏலியன், பிக்பேங் தியரி உள்ளிட்ட பல்வேறு அண்டவியல் தொடர்பான ஆய்வுகளை ஸ்டீபன் ஹாக்கிங் மேற்கொண்டார். இவ்வளவையும் அவர் சக்கர நாற்காலியில் இருந்தபடியே சாதித்தார். அவரது  மறைவுக்கு உலக தலைவர்கள் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

மருத்துவ உலகிற்கு மட்டுமல்ல, ஒட்டு மொத்த உலகிற்குமே அந்த இளைஞன் ஆச்சரியமளித்தான்.   அண்டப்பெருவெடிப்பு, கருந்துளை கோட்பாடுகளின் மூலம் பிரபஞ்சத்தின் புதிரை விடுவித்தார். "தி பிரீஃப் ஹிஸ்டரி ஆஃப் டைம்" என்ற அவரது புத்தகம் அதிக அளவு விற்பனையான புத்தகங்களில் ஒன்று என்ற சாதனையைப் படைத்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து