மனைவி சூதாட்ட புகார் எதிரொலி: முகமது ஷமி மீது விசாரணை நடத்த பி.சி.சி.ஐ உத்தரவு

புதன்கிழமை, 14 மார்ச் 2018      விளையாட்டு
mohamed shami 2018 3 14

மும்பை : முகமது ஷமிக்கு எதிராக அவரது மனைவி கூறிய குற்றச்சாட்டுக்களை ஆய்வு செய்யுமாறு பி.சி.சி.ஐ. உத்தரவிட்டு உள்ளது.

மனைவி புகார்...

இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீரர் முகமதுஷமி. இவர் மீது அவரது  மனைவி ஹசின் ஜகான்  பல்வேறு புகார்களை கூறி இருந்தார். கொடுமைப்படுத்தி, கொலை செய்ய  முயற்சித்ததாக போலீசில் புகார் அளித்தார். தென் ஆப்பிரிக்க தொடர் முடிந்த பிறகு முகமது ஷமி துபாய் சென்று பாகிஸ்தானைச் சேர்ந்த பெண்ணை சந்தித்து சூதாட்டத்தில் ஈடுபட்டு இருக்கலாம் என்றும் அவர் குற்றம் சாட்டி இருந்தார்.


விசாரணை...

இதன் அடிப்படையில் கொல்கத்தா போலீசார் முகமது ஷமி மீது வழக்கு பதிவு செய்து இருந்தனர். அதோடு கிரிக்கெட் வாரியத்துக்கு முகமதுஷமியின் தென் ஆப்பிரிக்க பயண விவரங்களை கேட்டு கடிதம்  எழுதி இருந்தனர். இந்த நிலையில் முகமது ஷமி மீது அவரது மனைவி தெரிவித்த சூதாட்ட புகார் குறித்து விசாரணை நடத்து மாறு கிரிக்கெட் வாரியத்தை நிர்வகிக்கும் பினோத்ராய்  ஊழல் தடுப்பு குழுவை கேட்டு கொண்டுள்ளார். அதன் தலைவர்  நீரஜ்குமாருக்கு  இ மெயிலில் இதை தெரிவித்துள்ளார். விசாரணை அறிக்கையை 1 வாரத்தில் தாக்கல் செய்யுமாறும் கேட்டுள்ளார். இதை தொடர்ந்து முகமதுஷமியிடம் சூதாட்ட குற்றச்சாட்டு குறித்து ஊழல் தடுப்பு குழு  விசாரணை நடத்துகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து