முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சீனப் பொருட்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தயாராகும் டிரம்ப்

வெள்ளிக்கிழமை, 16 மார்ச் 2018      உலகம்
Image Unavailable

வாஷிங்டன்: தங்கள் நாட்டுக்கு இறக்குமதி செய்யப்படும் சீனப் பொருட்கள் மீது நடவடிக்கை எடுக்க அமெரிக்கா தயாராகி வருவதாக வெள்ளை மாளிகையிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்கா அதிபராக டிரம்ப் பதவி ஏற்றதுமுதல் அமெரிக்காவில் அமெரிக்கர்களுக்கே முன்னுரிமை என்று கொள்கையை கடைபிடித்து வருகிறார். அதன்படி உள்நாட்டு நிறுவனங்களுக்கே அமெரிக்காவில் முன்னுரிமை கொடுத்து வருகிறார்.

இந்த நிலையில் அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பிற வெளிநாட்டு நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க அமெரிக்கா தயாராகி வருகிறது. குறிப்பாக சீன பொருட்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவுள்ளதாக வெள்ளை மாளிகையிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து வெள்ளை மாளைகை தரப்பில், "அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் சீனப் பொருட்கள் மீது நடவடிக்கை எடுக்க டிரம்ப் தயாராகி வருகிறார். வெளிநாட்டு நிறுவனங்கள் வரவால் அமெரிக்க நிறுவனங்கள் உள் நாட்டில் அகற்றப்படுவதை டிரம்ப் நம்புகிறார்'' என்று தெரிவிக்கப்படுள்ளது.

வெள்ளை மாளிகையின் பத்திரிகை துணைச் செயலாளர் ராஜ் ஷாவும் இந்த முடிவை உறுதிப்படுத்தி இருக்கிறார்.
தனது தவறான வர்த்தகக் கொள்கை மூலம் அமெரிக்காவை 'பலாத்காரம்' செய்துவிட்டது என அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் சீனாவை வெளிப்படையாக விமர்சித்தது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து