முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தெலுங்கானா மாநிலத்துக்கு ரூ.1.42 லட்சம் கோடி கடன்: முதல்வர் சந்திரசேகரராவ் தகவல்

வெள்ளிக்கிழமை, 16 மார்ச் 2018      இந்தியா
Image Unavailable

ஐதராபாத், தெலுங்கானா மாநிலத்துக்கு ரூ.1.42 லட்சம் கோடி கடன் உள்ளதாக அம்மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் தெரிவித்தார்.

ஐதராபாத் சட்டசபையில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம்  நடைபெற்றது. இதில் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் பேசியதாவது,

தெலுங்கானா உதயமான போது, மாநிலத்துக்கு ரூ.72 ஆயிரம் கோடி கடன் இருந்தது. அதன் பின்னர், மாநில வளர்ச்சிக்காக மேலும் கடன் பெற வேண்டி இருந்தது. தற்போது நமது மாநிலத்துக்கு ரூ. 1.42 லட்சம் கோடி கடன் உள்ளது. ஆனால், மாநிலத்துக்கு பல லட்சம் கோடி கடன் இருப்பதாக எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றன. இது கண்டிக்கத்தக்கது.

தெலங்கானா மாநிலப் போராட்டத்துக்காக 400 பேர் உயிர்த் தியாகம் செய்துள்ளனர். இதற்கு காங்கிரசே பொறுப்பு. ஆனால், அக்கட்சியோ தெலுங்கானா மாநிலத்தை தாங்கள்தான் வழங்கியதாக கூறி வருகிறது. அதுமட்டுமல்லாமல், தற்போது சட்டசபையிலும் காங்கிரசார்  அமளியில் ஈடுபடுவது, உறுப்பினர்களைத் தாக்குவது போன்ற அநாகரீகமான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதுதொடர்பாக, 2 காங்கிரஸ் எம்.எல்.ஏக்களின் பதவிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து