முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதுச்சேரி அருகே தி.க. பொதுக்கூட்டத்தில் ரகளை பாஜக - திகவினர் 20 பேர் மீது போலீசார் வழக்கு

ஞாயிற்றுக்கிழமை, 18 மார்ச் 2018      புதுச்சேரி

புதுச்சேரி அருகே உள்ள வில்லியனூரில் நேற்று முன்தினம் இரவு திராவிடர் கழகம் சார்பில் பொதுக் கூட்டம் நடந்தது.

கைது

சிறப்பு அழைப்பாளர்களாக சென்னையை சேர்ந்த வீரமர்த்தினி, அருள்மொழி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.அப்போது கூட்டத்தில் கடவுள் குறித்து விமர்சித்து பேசினர். இதனால் ஆத்திரம் அடைந்த கூட்டத்தில் இருந்த யாரோ ஒருவர் மேடையை நோக்கி திடீரென்று செருப்பை வீசினார். இதனால்அங்கு பதட்டம் ஏற்பட்டது. உடனே தி.க.வினரும், பாஜகவினரும்அங்கு திரண்டனர். தொடர்ந்து கூட்டம் நடத்துவதற்கு பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். திகவினருக்கு ஆதரவாக விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியினரும் பாஜகவினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து இருவரும் மோதிக்கொள்ளும் சூழல் உருவானதை தொடர்ந்து போலீசார் சமாதானம் செய்ய முயன்றும் முடியவில்லை.பாஜகவினர் தொடர்ந்து கூட்டம் நடத்தக் கூடாது என்று கூறி ரகளையில் ஈடுபட்டனர். அப்போது ஒருவரை ஒருவர் கைகளால் தாக்கிக் கொண்டனர். இதனால் அங்கு கலவரம் ஏற்படும் சூழல் ஏற்பட்டது.இதையடுத்து பதட்டத்தை தணிக்க போலீசார் தடியடி நடத்தினர். இதற்கிடையே இந்த மோதல் தொடர்பாக இருவரும் தனித் தனியே போலீசில் புகார் அளித்தனர். இதையடுத்து போலீசார் பாஜகவை சேர்ந்த வில்லியனூர் வடக்கு மாவட்ட தலைவர் மோகன்குமார், பாலபாஸ்கரன், அகிலன் உள்பட 13 பேர் மீதும், திகவை சேர்ந்த மாநில தலைவர் சிவ வீரமணி, ராஜூ, சடகோபன் உள்ளிட்ட 7 பேர் என மொத்தம் 20 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து