முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒரே ஆப்ஸ் மூலம் 100 அரசு சேவைகள்! கேரளாவில் தொடக்கம்

வெள்ளிக்கிழமை, 23 மார்ச் 2018      இந்தியா
Image Unavailable

கொச்சி, நாட்டிலேயே முதல்முறையாக மக்களுக்காக ஒரே ஆப்ஸ் மூலம் 100 சேவைகளை வழங்கும் திட்டத்தை தொடங்கி கேரளா தொடங்கி இருக்கிறது.

எம்கேரளா எனும் பெயரில் தொடங்கப்பட்டுள்ள இந்த ஆப்ஸ் மூலம் அரசின் 20 துறைகளில் இருந்து மக்கள் தங்களுக்கு தேவையான 100 சேவைகளைப் பெற்றுக் கொள்ளலாம். விரைவில் 80 துறைகளில் இருந்து ஆயிரம் சேவைகளாகவும் அதிகரிக்கப்பட உள்ளது. இந்த எம்கேரளா ஆப்ஸை கேரள மாநில தகவல் தொழில்நுட்ப இயக்கத்தினர் உருவாக்கியுள்ளனர். கொச்சியில் கடந்த 2 நாட்கள் நடந்த டிஜிட்டல் மாநாட்டில் இந்த செயலியை முதல்வர் பினராயி விஜயன் அறிமுகம் செய்து வைத்தார்.

இது குறித்து மாநில மின்னணு நிர்வாக இயக்க குழுவின் முரளீதரன் மானிங்கள் நிருபர்களிடம் கூறியதாவது,

எம்கேரளா ஆப்ஸ் மூலம் முதல்கட்டமாக 20 அரசு துறைகளில் இருந்து 100விதமான சேவைகளை மக்கள் பெறும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. விரைவில் 80 துறைகளில் இருந்து ஆயிரம் சேவைகளை மக்கள் பெறும் வகையில் சேர்க்கப்படும். இதேபோன்ற சேவைகள் ஏற்கனவே கேரள அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்தாலும், மக்கள் எளிதாகப் பயன்படுத்தும் மொபைல்போன் மூலம் கிடைக்க வேண்டும் என எண்ணினோம். இதன் மூலம் மக்களுக்கு அரசின் சேவைகளைப் பெற எந்தவழி வசதியாக இருக்கிறதோ அதை தேர்வு செய்து பெறலாம். அரசின் சேவைகளைப் பெற மக்கள் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஒவ்வொரு சேவையைப் பெற ஒவ்வொரு அலுவலகமாகவும் செல்லத் தேவையில்லை. அனைத்தையும் ஒரே மொபைல் ஆப்ஸிஸ் கொண்டு வந்திருக்கிறோம். அதுமட்டுமல்லாமல் முதல்கட்டமாக மாநிலத்தில் ஆயிரம் இடங்களில் மக்களுக்கு இலவசமாக வைபை இணைய வசதி கிடைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் இந்த வைபை கிடைக்கும் வசதி 5 ஆயிரம் இடங்களாக அதிகரிக்கப்படும் என்று முரளீதரன் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து