முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிம்லாவில் சோனியாவுக்கு திடீர் உடல்நலக்குறைவு

வெள்ளிக்கிழமை, 23 மார்ச் 2018      இந்தியா
Image Unavailable

சிம்லா, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்திக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, சிம்லாவில் இருந்து டெல்லிக்கு விமானம் மூலம் அவர் அழைத்து வரப்பட்டார்.

சிம்லா அருகே உள்ள சராபரா பகுதியில் பிரியாங்கா காந்தி வத்ரா ஒரு சொகுசு பங்களா கட்டி வருகிறார். இந்த வீட்டின் பணிகளைப் பார்வையிடுவதற்காக நேற்று முன்தினம் சோனியா காந்தி சிம்லா சென்றிருந்தார். அங்குள்ள 5 நட்சத்திர ஓட்டலில் சோனியாவும், பிரியங்கா காந்தி வத்ராவும் தங்கினார்கள்.

அப்போது, சோனியா காந்திக்கு நள்ளிரவில் திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, உடனடியாக கார் மூலம் சண்டிகர் நகருக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர் அங்குள்ள பி.ஜி.ஐ மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றார். பின்னர் மருத்துவர்களின் அறிவுரைப்படி சண்டிகரில் இருந்து விமானம் மூலம் டெல்லிக்கு நேற்று அதிகாலை 2.35 மணிக்கு சோனியா காந்தி அழைத்து வரப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இது குறித்து சிம்லாவில் உள்ள இந்திரா காந்தி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் மருத்துவர் சந்த் கூறுகையில், ‘ சோனியா காந்திக்கு உடல்நிலைக் குறைவு ஏற்பட்டு அதிகாலை 2.35 மணிக்கு மருத்துவமனைக்கு வந்தார். அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிப்பட்டபின் உடல்நிலை சீரானது. மருத்துவமனைக்கு வந்து சிறிதுநேரம் சிகிச்சை பெற்று அவரின் உடல்நிலை இயல்புநிலைக்கு வந்தபின் சிறப்பு விமானம் மூலம டெல்லி சென்றார். சிம்லாவில் தொடர்ந்து மழையும், பனியும் இருந்து வருவதால், சோனயா காந்திக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து