முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

என் மீது தேவையில்லாத குற்றச்சாட்டுகள் - முகமது ஷமி வருத்தம்!

சனிக்கிழமை, 24 மார்ச் 2018      விளையாட்டு
Image Unavailable

கொல்கத்தா : ’கடந்த 10, 15 நாட்களாக மனரீதியான டார்ச்சரை சந்தித்தேன், என் குடும்பத்துக்குப் பின்னால் யாரோ இருந்து சதி செய்கிறார்கள்’ என்று இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமி கூறினார்.

குற்றச்சாட்டு...

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி. இவருக்கும் திருமணம் ஆகி ஒரு மகள் உள்ளார். முகமது ஷமி குறித்து அவரது மனைவி ஹசின் ஜஹான் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். ஷமிக்கு பலப் பெண்களுடன் தொடர்பு இருப்பதாகவும் அவர்களுடன் தனிப்பட்ட முறையில் நேரம் செலவழிப்பதாகவும் அவர் தனது முகநூல் பக்கத்தில் ஆதாரங்களுடன் தெரிவித்தார்.

ஆதாரம் உள்ளது...

அதோடு ‘எனக்கு உண்மையாக இல்லாத ஷமி, நாட்டுக்கும் உண்மையாக இல்லை. பாகிஸ்தானை சேர்ந்த அலிஷாப் என்ற பெண்ணிடம் பணம் வாங்கியுள்ளார். இங்கிலாந்தில் இருக்கும் முகமது பாயின் வலியுறுத்தலின் பேரில் அதைப் பெற்றுக்கொள்ள ஒப்புக்கொண்டார். அதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது’ என்ற குற்றச்சாட்டையும் முன்வைத்தார்.

பிசிசிஐ விசாரணை

இந்த சர்ச்சையால் இந்தாண்டுக்கான பிசிசிஐ வீரர்கள் ஒப்பந்ததில் ஷமியின் பெயர் இடம்பெறவில்லை. இது தற்காலிக முடிவுதான் என பிசிசிஐ தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டது. முகமது ஷமி மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டாரா என்பது குறித்து பிசிசிஐ விசாரணை மேற்கொண்டது.

புகாரில் விடுவிப்பு...

இந்நிலையில், ஷமி மீதான ஸ்பார்ட் பிக்ஸிங் புகாரில் எந்த முகாந்திரமும் இல்லை என கூறி, பிரச்னையை பிசிசிஐ முடித்து வைத்துள்ளது. மேலும், கிரேட் ‘பி’-யில் விளையாடவும் ஒப்பந்தம் உறுதியாகியுள்ளது. இதனால் இந்த வருட ஐபிஎல் தொடரில் விளையாட அவருக்கு இருந்த சிக்கல் நீங்கியுள்ளது. டெல்லி டேர்டெவில்ஸ் அணி சார்பில் ஷமி விளையாடுகிறார்.

ஏதோ சதி நடக்கிறது...

இந்நிலையில் முகமது ஷமி கூறும் போது,’என் குடும்ப பிரச்னை காரணமாக, கடந்த பத்து, பதினைந்து நாட்களாக மனரீதியான டார்ச்சரை அனுபவித்து வந்தேன். என் மீது தேவையில்லாத குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளது. அவை கனவில் கூட நினைத்திராத கேவலமான குற்றச்சாட்டாக இருக்கிறது. எனக்குப் பின்னால் ஏதோ சதி இருக்கிறது. யாரோ, என் குடும்பத்தைப் பிரிக்கப் பார்க்கிறார்கள். இதில் இருந்து விரைவில் வெளிவருவேன்’ என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து