முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நியமன எம்எல்ஏக்கள் சட்டசபைக்குள் நுழைய தடை:கவர்னர் கிரன்பேடி மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு கடிதம் - புதுவை அரசு மீது நடவடிக்கை பாயுமா?

வியாழக்கிழமை, 29 மார்ச் 2018      புதுச்சேரி

புதுச்சேரி சட்டசபைக்கு மாநில அரசின் பரிந்துரை இல்லாமல் மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் நேரடியாக பாரதிய ஜனதா நிர்வாகிகள் சாமிநாதன், சங்கர் மற்றும் செல்வகணபதி ஆகியோரை  நியமன எம்எல்ஏக்களாக நிமித்தது.

நியமன எம்எல்ஏக்கள் விவகாரம்

மத்திய அரசு நேரடியாக நியமித்த நியமன எம்எல்ஏக்கள் 3 பேரை புதுச்சேரி சட்டசபை சபாநாயகர் வைத்திலிங்கம் அங்கீகரிக்க மறுத்து விட்டார். அதே நேரத்தில் புதுவை கவர்னர் கிரன்பேடி 3 பேருக்கும் பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதற்கிடையில் மத்திய அரசின் நேரடி நியமனம் செல்லாது என அறிவிக்க கோரி காங்கிரஸ் எம்எல்ஏ லட்சமிநாராயணன் சென்னை ஜகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த ஜகோர்ட்டு எம்எல்ஏக்கள் நியமனம் செல்லும் என்று தீர்பளித்தது. இதை தொடர்ந்து இடைக்கால பட்ஜெட் கூட்டத் தொடரில் பங்கேற்போம் என்று நியமன எம்எல்ஏக்கள் 3 பேரும் அறிவித்தனர். அதன்படி சட்டசபை கூட்டத்தில் பங்கேற்க வந்த எம்எல்ஏக்களை சட்டசபை காவலர்கள் நுழைவு வாயிலிலேயே தடுத்து நிறுத்தி விட்டனர். அவர்கள் சட்டசபைக்குள் அனுமதிக்கப் படவில்லை. இதனை தொடர்ந்து 3 எம்எல்ஏக்களும் சட்டசபை வாயிலிலேயே உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினர். போராட்டத்தின் போது சங்கர் எம்எல்ஏ மயங்கி விழுந்தார். சட்டமன்ற கூட்டம் முடிந்ததும் போராட்டத்தை கைவிட்ட மற்ற 2 எம்எல்ஏக்களும் கவர்னர் கிரன்பேடியை நேரில் சந்தித்து ஜகோர்ட்டு உத்தரவுப்படி தங்களை சட்டசபைக்குள் அனுமத்தக்காதது குறித்து புகார் செய்தனர். இது குறித்து கவர்னர் கிரன்பேடி தலைமை செயலாளரிடம் அறிக்கை கேட்டார். இதை தொடர்ந்து தலைமை செயலாளர் அஸ்வனிகுமார் போலீசாரிடம் விசாரணை நடத்தி அறிக்கையை கவர்னரிடம் அளித்தார். தலைமை செயலாளரின் அறிக்கையை ஆய்வு செய்த கவர்னர் கிரன்பேடி அதில் தனது கருத்தையும் குறிப்பாக எழுதி மத்திய அரசுக்கு புகாராக அனுப்பி உள்ளார். இந்த அறிக்கையை மத்திய அரசு ஆய்வு செய்து புதுவை அரசு மீது ந்வடிக்கை எடுக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் முதல்வர் நாராயணசாமி, மாநில காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான நமச்சிவாயாம், முதல்வரின் பாராளுமன்ற செயலாளர் லட்சுமி நாராயணன் எம்எல்ஏ, ஆகியோர் நேற்று டெல்லி சென்றனர். அவர்கள் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை சந்தித்து புதுவை அரசியல் நிலவரம் குறித்து பேசுவார்கள் என்று தெரிகிறது. மேலும் மேலிட தலைவர்களை சந்தித்து கவர்னர் புகார் குறித்து பேச திட்டமிட்டு உள்ளதாகவும் தெரிகிறது. இதற்கிடையே கோர்ட்டு தீர்ப்பை ஏற்று சட்டசபைக்குள ;தங்களை அனுமதிக்காதது குறித்து நியமன எம்எல்ஏக்கள் 3 பேரும் டெல்லி சென்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து புகார் அளிக்க திட்ட மிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக அவர்கள் இன்று டெல்லி செல்வார்கள் என்று தெரிகிறது. இத்தகைய சம்பவங்களால் புதுவை அரசியலில் திடீர் பரபரப்பு நிலவி வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து