முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லெட்சுமணபுரம் ஊராட்சியில் நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் 308 பயனாளிகளுக்கு ரூ.1.43 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் கலெக்டர் வே.ப.தண்டபாணி வழங்கினார்

வியாழக்கிழமை, 29 மார்ச் 2018      கடலூர்

கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டம் லெட்சுமணபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் சிறப்பு கிராம சபை கூட்டம் மற்றும் மனுநீதி நாள் முகாம் திட்டக்குடி சட்டமன்ற உறுப்பினர் வி.கணேசன்  முன்னிலையில் கலெக்டர் வே.ப.தண்டபாணி, ,  தலைமையில்  நடைபெற்றது. இம்மனுநீதி நாள் முகாமில் அரசு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வே.ப.தண்டபாணி, ,  வழங்கி தெரிவித்ததாவது:

மனுநீதி நாள் முகாம்

கடலூர் மாவட்டத்தின் கடைகோடியான இந்த கிராமத்தில் இன்று இம்மனுநீதிநாள் முகாம் நடைபெறுகிறது. இம்மனுநீதிநாள் முகாம் தொடர்பாக ஏற்கனவே பெறப்பட்ட 527 மனுக்களில் 167 மனுக்கள் ஏற்கப்பட்டும், 112 மனுக்கள் பரிசீலினையிலும், 248 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. கிராமங்கள்தான் நாட்டின் முதுகெலும்பு. நகர்புறத்தைப்போல் கிராமத்தையும் முன்னேற்றமடைய செய்ய பொதுமக்களாகிய நீங்கள் ஒத்துழைக்க வேண்டும் என தெரிவித்தார்.

 இம்முகாமில் வருவாய்த்துறை சார்பில் பட்டா மாற்றம் வீட்டுமனைப்பட்டா 92 பயனாளிகளுக்கு ரூ.11,74,335- மதிப்பீட்டிலும், முதியோர் உதவித்தொகை மற்றும் இதர உதவித்தொகைகள் 14 பயனாளிகளுக்கு ரூ.14,000- மதிப்பீட்டிலும், குடும்ப அட்டை 8 பயனாளிகளுக்கும், பொது மருத்துவம் மற்றும் நோய் தடுப்பு மருத்துத்துறை சார்பில் 27 பயனாளிகளுக்கு ரூ.48,350- மதிப்பீட்டிலும், தோட்டக்கலைத்துறை சார்பில் 5 பயனாளிகளுக்கு ரூ.1,39,084.20- மதிப்பீட்டிலும், வேளாண்மைத்துறை சார்பில் 14 பயனாளிகளுக்கு ரூ.18,66,657- மதிப்பீட்டிலும், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் 01 பயனாளிக்கு ரூ.8,846- மதிப்பீட்டிலும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபாண்மையினர் நலத்துறை சார்பில் 01 பயனாளிக்கு ரூ.3,450- மதிப்பீட்டிலும், தொழிலாளர் நலத் துறை சார்பில் 20 பயனாளிகளுக்கு ரூ.70,500- மதிப்பீட்டிலும்,  மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 10 பயனாளிகளுக்கு ரூ.4,00,000- மதிப்பீட்டிலும், பெண்ணாடம் பேரூராட்சி அலுவலகத்தின் மூலம் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் 10 பயனாளிகளுக்கு ரூ.20,10,000- மதிப்பீட்டிலும், வட்டார வளர்ச்சி அலுவலர் மூலம் இந்திரா நினைவு குடியிருப்பு திட்டத்தின் கீழ் 32 பயனாளிகளுக்கு ரூ.39,60,000- மதிப்பீட்டிலும், மங்கள+ர் வட்டார வளர்ச்சி அலுவலகம் மூலம் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் 15 பயனாளிகளுக்கு ரூ.23,80,000- மதிப்பீட்டிலும், வேளாண்மை இயந்திர வாடகை மையம் ரூ.16 லட்சம் மதிப்பீட்டிலும் என ஆகமொத்தம் 308 பயனாளிகளுக்கு ரூ.1,43,35,222- மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை திட்டக்குடி சட்டமன்ற உறுப்பினர் வி.கணேசன்  முன்னிலையில் கலெக்டர் வே.ப.தண்டபாணி, ,   வழங்கினார்.வருகை புரிந்த அனைவரையும் விருத்தாச்சலம் வருவாய் கோட்டாட்சியர் சந்தோஷினி சந்திரா  வரவேற்று பேசினார்.  இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கோ.விஜயா, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் வை.ரவிச்சந்திரன், கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் ராஜவேல், துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) டாக்டர் ஜவஹர்லால், தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி)                 கூஷ்ணா தேவி, மாவட்ட வழங்கல் அலுவலர் தினேஷ், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் சண்முக சுந்தரம், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அலுவலர் ராமு, திட்டக்குடி வட்டாட்சியர் (ச.பா.தி) சிவகுமார், மருத்துவ காப்பீட்டு திட்ட மாவட்ட திட்டட அலுவலர் மணிவண்ணன், தூய்மை பாரத இயக்க ஒருங்கிணைப்பாளர் வேலுமணி, கிருஷ்ணா புற்றுநோய் மருத்துவமனை மக்கள் தொடர்பு அலுவலர் எஸ்.ஞானஸ்கந்தன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.இறுதியில் திட்டக்குடி வருவாய் வட்டாட்சியர் ஜெ.ரவிச்சந்திரன்  நன்றி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து