முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாடு முழுவதும் மத்திய படை தயார்நிலையில் இருக்க வேண்டும்: ராஜ்நாத் சிங்

செவ்வாய்க்கிழமை, 3 ஏப்ரல் 2018      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி: வடமாநிலங்களில் ஏற்பட்டுள்ள கலவரம் எதிரொலியாக இந்தியா முழுக்க மத்திய படை தயார்நிலையில் இருக்க வேண்டும் என்று உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கடந்த மார்ச் 20- ம் தேதி சுப்ரீம் கோர்ட் ஒரு தீர்ப்பு வழங்கியது. அதன்படி தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடி இன மக்கள் மீதான வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்படி இனி அரசு ஊழியர்களை கைது செய்ய முடியாது என்று கூறியது. அப்படியே கைது செய்ய வேண்டும் என்றால் அதிக கிரேட் கொண்ட அதிகாரிகள் கொடுக்கும் அனுமதியின் பேரில் மட்டுமே கைது செய்ய முடியும் என்று கூறியது.

இதற்கு எதிராக இந்தியாவின் வட மாநிலங்கள் முழுக்க தலித் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த போராட்டம் கலவரமாக மாறியது. ராஜஸ்தான், டெல்லி, குஜராத், அரியானா, உத்தர பிரதேசம், ஜார்கண்ட், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் இந்த போராட்டம் பரவியது. இதுவரை மொத்தமாக இதில் 7 பேர் மரணம் அடைந்தனர். இதனால் தலித் மக்கள் போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையை கட்டுப்படுத்த ராஜ்நாத் சிங் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அதன்படி, அனைத்து மாநிலங்களும் சட்டம் ஒழுங்கை பராமரிக்க வேண்டும்.வன்முறையை கட்டுப்படுத்த மாநிலங்களுக்கு தேவையான உதவிகளை மத்திய அரசு செய்யும். மேலும் மாநிலங்களில் பொது அமைதியை பாதுகாக்க வேண்டும். இந்தியா முழுக்க மத்திய ரிசர்வ் படை தயாரி நிலையில் இருக்க வேண்டும். அனைத்து கட்சிகளும் இதில் அரசுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று ராஜ்நாத்சிங் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து