முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பார்லி.யில் எதிர்க்கட்சிகள் தொடர் அமளி: இதுவரை எந்த மசோதாவும் தாக்கல் செய்யமுடியவில்லை - வெங்கையா நாயுடு

புதன்கிழமை, 4 ஏப்ரல் 2018      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி : பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் அமளியால் அவை நடவடிக்கை தொடர்ந்து முடங்கி வருவதை அடுத்து, இதுவரை எந்த மசோதாவும் தாக்கல் செய்யவில்லை என்று மாநிலங்களவை துணைத்தலைவர் வெங்கைய்யா நாயுடு வேதனை தெரிவித்துள்ளார்.

2-வது கட்ட அமர்வு

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது கட்ட அமர்வு 5-ந் தேதி தொடங்கியது முதல் எதிர்க்கட்சிகளின் அமளியால் இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டு வந்தன. இந்நிலையில் இரு அவைகளும் நேற்று மீண்டும் கூடியது.  அவை கூடியதும் எதிர்கட்சிகள் காவிரி மேலாண்மை வாரியம், ஆந்திராவுக்கு சிறப்பு மாநில அந்தஸ்து, பி.என்.பி. வங்கி கடன் மோசடி உள்ளிட்ட விவகாரங்களை முன்வைத்து  அமளியில் ஈடுபட்டன.

தொடர்ந்து முடக்கம்

இதனால் அவை நடவடிக்கைகள் தொடர்ந்து முடங்கி உள்ளன. இதன் காரணமாக மக்களவை மதியம் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. அதே போன்று மாநிலங்களவையும்  தொடர்ந்து அமளி நீடித்ததால் மாநிலங்களவை துணைத்தலைவர் வெங்கைய்யா நாயுடு நேற்று மதியம் 2 மணி வரை ஒத்தி வைத்தார். அப்போது அவர் பேசுகையில், நாங்கள் எந்த மசோதாவும் தாக்கல் செய்யவில்லை. நாடு வளர்ச்சியை விரும்புகிறது.  நீங்கள் நாட்டு மக்களின் பொறுமையை சோதிக்கிறீர்கள். புரிந்துகொள்ளுங்கள் அவையில் என்ன நடக்கிறது என்று நாடு பார்த்துக்கொண்டிருக்கிறது என கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து