முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வேலூர் வீரருக்கு பிரபலங்கள் வாழ்த்து

சனிக்கிழமை, 7 ஏப்ரல் 2018      விளையாட்டு
Image Unavailable

சதீஷ்குமார் சிவலிங்கத்திற்கு வாழ்த்துக்களும் பாராட்டுகளும் குவிந்து வருகின்றன.காமன்வெல்த்தில் தங்கம் வென்ற தமிழக வீரர் சதீஷ்குமாருக்கு வாழ்த்து தெரிவித்து உள்ளார். அவருக்கு  ரூ.50 லட்சம் பரிசு வழங்கப்படும் என  முதலமைச்சர் பழனிசாமி  அறிவித்து உள்ளார்.

துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் வெளியிட்டு உள்ள வாழ்த்துச்செய்தியில் , ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் - பளுதூக்குதலில் 77 கிலோ எடைப்பிரிவில் நமது வேலூரைச் சேர்ந்த சதிஷ்குமார் சிவலிங்கம் தங்கம் வென்று தமிழகத்திற்கு  பெருமை சேர்த்துள்ளார். சதிஷ்குமார் மென்மேலும் சாதனைகள் புரிய எனது மனமார்ந்த வாழ்த்துகள் என கூறி உள்ளார்.

காமன்வெல்த் போட்டியில் பளுதூக்கும் பிரிவில் தங்கம் வென்று தமிழ்நாட்டுக்கும், இந்திய நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ளா சதீஷ்குமார் சிவலிங்கத்துக்கு  அமித் ஷா வாழ்த்து தெரிவித்து உள்ளார். காமன்வெல்த் பளுதூக்கும் போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீரர் சதீஷ்குமார் சிவலிங்கத்துக்கு சச்சின் டெண்டுல்கர் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து