முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பங்குனி பொங்கல் திருவிழாவிற்காக அக்கினிச்சட்டி, பொம்மைகள் செய்யும் பணி தீவரம்

ஞாயிற்றுக்கிழமை, 8 ஏப்ரல் 2018      விருதுநகர்
Image Unavailable

பாலையம்பட்டி  -  விருதுநகர் மாவட்டத்தில் பங்குனி மாதத்தில் அம்மன் கோவில்களில்  தோறும் பொங்கல் திருவிழா நடைபெறுவது வழக்கம். அருப்புக்கோட்டை மாரியம்மன் கோவில், பாலையம்பட்டி முத்துமாரியம்மன் கோவிலில் கடந்த செவ்வாய்கிழமை  பங்குனி  திருவிழாவிற்கான கொடியேற்றம்  நடைபெற்றது. பக்தர்கள் தாங்கள் நினைத்த காரியம் நிறைவேற அம்மனிடம் வேண்டி கொள்கின்றனர். நிறைவேறிய பின்  அதற்க்கான நேர்த்தி கடனை செலுத்துகின்றனர். பங்குனி பொங்கல் திருவிழாவை முன்னிட்டு அருப்புக்கோட்டை மணி நகரத்தை சேர்ந்த 20க்கும் மேற்ப்பட்ட மண்பாண்ட தொழிலாளர்கள்  குடும்பங்கள் பொம்மை தயாரிப்பு பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர். இது குறித்து மண்பாண்ட தொழிலாளி பிரேமா கூறுகையில்: ஆண்டு தோறும் பங்குனி பிறந்து விட்டாலே குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் சேர்ந்து   நேர்த்தி கடன் செலுத்துவதற்கான ஆயிரங்கண் பானை,  பொம்மைகள்   தவளும் குழந்தை,  பாதம், கை, இடுப்பு, தொட்டில் பிள்ளை, கண்மலர், திருமணம் ஜோடி  போன்ற மண் பொம்மைகளை தயாரிப்பதில் முனைப்பாக செயல்படுவோம். இதனை காய வைத்து அதற்கு வர்ணம் தீட்டி கோவிலுக்கு நேர்த்தி கடன் செலுத்த வரும் பக்தர்களிடம் விற்பனை செய்வோம். இதனை விருதுநகர், கோவில்பட்டி, ரெட்டியபட்டி, மண்டபசாலை, காரியாபட்டி, மற்றும் சுற்றியுள்ள கிராமபுறங்களில் உள்ள மக்கள் எங்கள் பகுதிக்கு வந்து வாங்கி செல்கின்றனர்.   தற்போது கோவில் பகுதியில் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து கொண்டு வரும் பொம்மைகள்,  சுடப்பட்ட பொம்மைகளை கொண்டு வந்து விற்பனை செய்கிறார்கள். நாங்கள் ஜதீகத்தின்படி  சுடப்படாத பொம்மைகளையே விற்பனை செய்கிறோம். சுடப்பட்ட பொம்மைகள் விற்பனை செய்வதை கோவில் நிர்வாகம் தடுக்க வேண்டும் என்றார்.  தொழிலாளி  ராஜீ கூறுகையில்: எங்களது முன்னோர் காலத்தில் இருந்து மண்பாண்ட தொழில் செய்து வருகிறோம். விழா காலங்களை தவிர்த்து மற்ற நாட்களில் மண்பானை, சட்டிகள் செய்வதில் ஆர்வம் காட்டுகிறோம்.  இத் தொழிலுக்கான  மண்ணை  வெகு தூரத்திலிருந்து கொண்டு வருவதாலும், அதனை அள்ளி  கொண்டு வருவதில் உள்ள அரசின் கெடுபிடியாலும்   எங்களது பகுதி குடும்பத்தை சேர்ந்தவர்கள் பலர்  இத் தொழிலில்  ஆர்வம் காட்டுவதில்லை. தற்போது  தொழிலில் நுணக்கம் தெரிந்தவர்கள் சிலரே உள்ளனர்.  இருந்தாலும் எங்களது  முன்னோர்களின்  குல தொழிலை வளர்ப்பதற்க்கும் எங்களது குழந்தைகளை ஊக்குவித்து வருவதாக கூறினார்.    

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து