முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பலத்த காற்று எதிரொலி: 62 அடி உயர சீன பேரரசர் சிலை மண்ணில் வீழ்ந்தது

புதன்கிழமை, 11 ஏப்ரல் 2018      உலகம்
Image Unavailable

பெய்ஜிங்: சீனாவின் பின்சோயு நகரில் வீசிய பலத்த காற்றில் 62 அடி உயர சீன பேரரசர் குயின் ஷி ஹூயாங் கின் முழு உருவ வெண்கல சிலை முழுவதும் பெயர்ந்து மண்ணில் வீழ்ந்தது.

வெண்கல சிலை
சீனாவின் முதல் பேரரசர் குயின் ஷி ஹூயாங் கின் முழு உருவ வெண்கல சிலை ஷாங்டாய் மாகாணத்தில் பின்சோயு நகரில் நிறுவப்பட்டுள்ளது. 62 அடி (19 மீட்டர்) உயரம் உள்ள இச்சிலை பல டன் எடை கொண்டது. இச்சிலை பின்சோயு நகரின் அடையாள சின்னமாக திகழ்கிறது.

பலத்த காற்று
சமீபத்தில் பின்சோயு நகரில் பலத்த காற்று வீசியது. அதில் இச்சிலை முழுவதும் பெயர்ந்து மண்ணில் வீழ்ந்தது. தகவல் அறிந்ததும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். மண்ணில் வீழ்ந்து கிடந்த சிலையை கிரேன் மூலம் தூக்கி அப்புறப்படுத்தினர். இப்படம் இணைய தளங்களில் வைரல் ஆக பரவியது.

பின்சோயு நகரில்...
பேரரசர் குயின் ஷி ஹூயாங் சீனாவில் குயின் பேரரசை நிறுவியவர். கி.மு. 206 முதல் 221 வரை இவர் ஆட்சி செய்தார். சீன பெருஞ்சுவரின் முதல் பகுதியை கட்டி இவர்தான் தொடங்கி வைத்தார். சுற்றுலா பயணிகளை கவர்வதற்காக கடந்த 2005-ம் ஆண்டு பின்சோயு நகரில் இவரது சிலை நிறுவப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து