முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கால்பந்தாட்டத்தை தொடங்கி வைத்த கரடி: ரஷ்யாவில் விலங்கு நல ஆர்வலர்கள் எதிர்ப்பு

புதன்கிழமை, 18 ஏப்ரல் 2018      உலகம்
Image Unavailable

மாஸ்கோ : ரஷ்யாவில் உள்ளூர் கால்பந்தாட்டத்தை கரடியை கொண்டு தொடங்கி வைத்ததற்கு விலங்கு நல ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

ரஷ்யாவின் பியாடிரிக்கார்ஸ்க் நகரில், மாஷக் - கேஎம் டபிள்யு மற்றும் அங்கஸ்ட் அணிகளுக்கு இடையே நடந்த உள்ளூர் காப்பந்து போட்டியில் டிம் என்ற கரடி பார்வையாளர்களின் முன் பின் கால்களில் நின்றுக் கொண்டு பார்வையாளர்களை நோக்கி கைதட்டி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தது.

இந்தக் காட்சியை கண்ட வில நல அமைப்புகள் இது மிருகவதை என்று போட்டியை நடத்திய அதிகாரிகளை நோக்கி கண்டன குரல்களை எழுப்பியுள்ளன. ரஷ்யாவில் உள்ளூர் கால்பந்தாட்டத்தை கரடியை கொண்டு தொடங்கி வைத்ததற்கு விலங்கு நல ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

ரஷ்யாவில் உள்ளூர் கால்பந்து போட்டியில் கரடி பயன்படுத்தப்பட்டது குறித்து விலங்கு நல அமைப்பான எலிசா ஏலன் கூறிய போது, "இது முற்றிலும் மனிதாபிமானமற்ற செயல். கால்பந்து போட்டியில் கரடியை அடிமையை போல் பயன்படுத்துவது மிகவும் ஆபத்தானது" என்றார்.

இந்த நிலையில் ரஷ்யா இந்த வருடம் உலக கால்பந்து போட்டியை நடத்த இருப்பதால் கரடி டிம் தொடக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் என்று தகவல் பரவியது. ஆனால் இதனை உலக கால்பந்து அமைப்பான பிபா மறுத்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து