முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குழந்தைகளுக்கு கதை சொல்லும் நிகழ்ச்சி மதுரையில் 21 -ம் தேதி நடக்கிறது

வியாழக்கிழமை, 19 ஏப்ரல் 2018      மதுரை
Image Unavailable

மதுரை,-அர்விந்த் பிராண்ட் ‘அன்லிமிடெட்’ பேஷன், கதை சொல்லும் நிகழ்ச்சி, மதுரையில் ஏப்ரல் 21 ம் தேதி நடக்கிறது.
குழந்தை பருவம் முதல், குழந்தைகளின் ஒருங்கிணைந்த பங்காக இருக்கும் இந்த கதை சொல்லும் நிகழ்ச்சியை, வனிதா வழங்குகிறார். காலை 10.30 மணிக்கு துவங்கும் இந்த நிகழ்வு, மாலை 6.30 மணி வரை நீடிக்கும். 90 நிமிடங்கள் பயிற்சி பட்டறை இடம் பெறும்.
கூட்டுக்குடும்பங்கள் இருந்தபோது, தாத்தா, பாட்டிகள், பேரப்பிள்ளைகளுக்கு கதை சொன்ன காலம் இருந்தது. தற்காலத்தில் குழந்தைகளுக்கு கதை சொல்லவும், வழிகாட்டவும் ஆசிரியர்களும் சிறப்பு பயிற்சியாளர்களும் உருவாகியுள்ளனர். தாத்தா, பாட்டி கதைகளில் ஒரு வித்தியசமான கற்பனைகள் கலந்திருந்தன. இப்போது, சொல்லப்படும் கதைகளில், கற்பனைக்கும் அப்பாற்பட்ட புதுமைகள் பல உள்ளன. கதை சொல்வது மட்டுமின்றி, குழந்தைகளின் கற்பனை திறனையும் வெளிக் கொண்டு வர இந்த கோடை காலத்தில் , அர்விந்த் பிராண்ட் ஏற்பாடு செய்துள்ளது.
அர்விந்த் பிராண்ட் லிமிடெட் நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் சேகர் சிஎஸ், கூறுகையில், ‘‘ குழந்தைகள் தங்களது கலாச்சாரத்தையும், கனவுகளையும் இணைத்து புதிய கதைகளை உருவாக்க துாண்டுவதே இந்த முயற்சியின் நோக்கம். என்றார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து