முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

போக்குவரத்து பணியாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் ராமநாதபுரத்தில் கலெக்டர் முனைவர் நடராஜன் தொடங்கி வைத்தார்

வியாழக்கிழமை, 26 ஏப்ரல் 2018      ராமநாதபுரம்
Image Unavailable

ராமநாதபுரம்,- ராமநாதபுரத்தில் சாலை பாதுகாப்பு வாரவிழாவையொட்டி போக்குவரத்து துறை பணியாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாமினை கலெக்டர் முனைவர் நடராஜன் தொடங்கி வைத்தார்.
ராமநாதபுரம் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணிமனை வளாகத்தில் 29-ஆவது சாலைப் பாதுகாப்பு வார விழா நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக  போக்குவரத்;துத்துறையின் சார்பாக, போக்குவரத்துத் துறையில் பணிபுரியும் பணியாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் கண் பரிசோதனை முகாமினை கலெக்டர் முனைவர் நடராஜன் துவக்கி வைத்தார்.
தமிழ்நாடு அரசு, பொது மக்களிடையே சாலைப் பயணங்களின் போது பாதுகாப்பான முறையில் பயணித்திட வேண்டுமென்ற எண்ணத்தை வலியுறுத்தும் விதமாக  இவ்வாண்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் 23.04.2018 முதல் 29.04.2018  வரையிலான 7 நாட்கள்  சாலைப்பாதுகாப்பு வாரவிழாவாக கடைப்பிடித்திட அறிவுறுத்தியுள்ளது. அதனடிப்படையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்;ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்தவகையில் ராமநாதபுரத்தில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணிமனை வளாகத்தில் போக்குவரத்துத் துறையில் பணிபுரியும் பணியாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் கண் பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது. இம்முகாமினை மாவட்ட கலெக்டர் முனைவர் ச.நடராஜன் துவக்கி வைத்தார். முகாமில்  போக்குவரத்துத் துறை பணியாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு  பொது மருத்துவ பரிசோதனை, இருதய சிறப்பு பரிசோதனை, இரத்த பரிசோதனை,  இரத்தஅழுத்த பரிசோதனை, சர்க்கரை மற்றும் கொழுப்பு அளவு கண்டறிதல், மின் ஒலி இதய வரைவு  உள்ளிட்ட மருத்துவ பரிசோதனைகளும்,  கண் பார்வை குறைபாடு குறித்த பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டது. தேவிப்பட்டிணம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தைச் சார்ந்;த மருத்துவக் குழுவினர்கள் மற்றும் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனையைச் சார்ந்த மருத்துவ குழுவினர்கள் கலந்து கொண்டு மருத்துவ முகாமில் பங்கேற்ற நபர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்து ஆலோசனைகளை வழங்கினார்கள். பரிசோதனையின் போது பணியாளர்களுக்கு தீவிர குறைபாடு கண்டறியப்பட்டால் மேல் சிகிச்சைக்காக  ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனை மற்றும் அரவிந்த் கண் மருத்துவமனைக்கு பரிந்துரை செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில், வட்டாரப் போக்குவரத்து அலுலவர் க.செல்வக்குமார், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் கோ.அண்ணாதுரை, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ராமநாதபுரம் கிளை மேலாளர்கள் என்.பத்மகுமார் (புறநகர்), பி.தமிழ்மாறன் (பழுதுகட்டும் பணிமனை), ரவி (நகர்புறம்), தேவிப்பட்டிணம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தைச் சார்ந்;த மருத்துவர்கள் மரு.முனீஸ்வரி, மரு.ஆனந்த், மரு.எபனேசர், அரவிந்த் கண் மருத்துவமனையைச் சார்ந்த மருத்துவர்கள் மரு.நித்திஸ், மரு.அனுக் உட்பட அரசு அலுவலர்கள், போக்குவரத்து துறையைச் சார்ந்த பணியாளர்கள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து