முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மங்கலதேவி கண்ணிகி கோயில் முழு நிலவு திருவிழாவை முன்னிட்டு கலை நிகழ்ச்சியினை கலெக்டர் பல்லவி பல்தேவ் துவக்கி வைத்துத்தார்

திங்கட்கிழமை, 30 ஏப்ரல் 2018      தேனி
Image Unavailable

  தேனி, - தேனி மாவட்டம், கூடலூர் நகராட்சிக்குட்பட்ட பளியன் குடி கிராமத்தில் சுற்றுலாத்துறையின் சார்பில் மங்கலதேவி கண்ணிகி கோயில் முழு நிலவு திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற கலை நிகழ்ச்சியினை  மாவட்ட ஆட்சித்தலைவர்  ம.பல்லவி பல்தேவ்,   துவக்கி வைத்து, கண்ணகி கோயில் குறித்த சிறப்பு கையேட்டினை வெளியிட்டு, பக்தர்களுக்காக அமைக்கப்பட்டிருந்த சிறப்பு மருத்துவ முகாமினை பார்வையிட்டார்.
 கலை நிகழ்ச்சியினை துவக்கி வைத்து, மாவட்ட ஆட்சித்தலைவர்   தெரிவிக்கையில், தமிழ்ப் பண்பாட்டின் பெட்டகமாகவும், ஆன்மீகத்தின் இருப்பிடமாகவும், கலைத்திறனின் நிலைக் களமாகவும் விளங்குகின்ற திருக்கோயில்களின் சொத்துக்களை பாதுகாத்து பராமரிப்பதிலும், வழிபாடுகளை நடத்துவதிலும், இறையன்பர்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றித் தருவதிலும் பல்வேறு திட்டங்களை தீட்டி தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. ஆண்டுதோறும், சித்திரை மாத முழு நிலவு அன்று மதுரையில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் அதே நாளில் தேனி மாவட்ட எல்லையில் கண்ணகி விண்ணுலகம் சென்றதாக கருதப்படும் மலை உச்சியில், சேரன் செங்குட்டுவனால் அமைக்கப்பட்ட மங்கல தேவி கண்ணகி கோவில் திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது.
 தேனி மற்றும் கேரள மாநில இடுக்கி மாவட்ட மக்களால் இத்திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. இத்திருவிழவினை தேனி மாவட்ட அனைத்து பக்தர்களும் வழிபாடு செய்யும் விதமாக தமிழக அரசு தேனி மாவட்டத்திற்கு உள்ளுர் விடுமுறை அளித்து, தேனி மற்றும் இடுக்கி மாவட்ட பக்தர்கள் வழிபாடு செய்வதற்கு ஏதுவாக தமிழக மற்றும் கேரள மாநில வருவாய்த்துறை, வனத்துறை, காவல்துறை மற்றும் பிற துறை அலுவலர்களுடன் முன்னேற்பாடு பணிகள் கூட்டம் நடத்தி திருவிழாவின் போது பகத்தர்கள் தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு இவ்விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
 மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மாவட்ட ஆட்சியரின் விருப்புரிமை நிதியலிருந்து பளியன் குடி கிராமம் முதல் கண்ணகி கோவில் வரை சாலையினை சீரமைப்பதற்கு ரூ.1 இலட்சம் நிதியுதவி வழங்கப்பட்டு, சாலை சீரமைக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழக அரசு பக்தர்கள் இத்திருவிழாவை அனைத்து வகையிலும் சிறப்பாக கொண்டாடப்பட வேண்டும் என்பதனை கருத்தில் கொண்டு சுற்றுலாத்துறையின் சார்பில் ஆண்டுதோறும் பளியன் குடி கிராமத்தில் கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. கண்ணகி கோயிலுக்கு பக்தர்கள் ஏதுவாக சென்று வர கண்ணகியின் வரலாறு, வழித்தடங்கள், தமிழக கேரள முக்கிய அலுவலர்களின் கைபேசி எண்ணகள் ஆகிய விபரங்களுடன் அடங்கிய கையேடு வழங்கப்பட்டுள்ளது. இந்த கையேடு தமிழக மற்றும் கேரள பக்தர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ம.பல்லவி பல்தேவ்,  தெரிவித்தார்.
      சுற்றலாத்துறையின் சார்பில் மங்கள இசை, கரகாட்டம், ஒயிலாட்டம், கிராமிய கலை நிகழ்ச்சிகள் பரதநாட்டியம், பல்வகை நடனங்கள், இன்னிசை நிகழ்ச்சிகள் ஆகிய நிகழ்ச்சிகள் பகத்தர்கள் கண்டு கழித்திடும் வகையில் நடத்தப்பட்டது.
  இந்நிகழ்வின் போது, மாவட்ட சுற்றுலா அலுவலர்   உமாதேவி   மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர்  .சுருளி ராஜா  , உத்தமபாளையம் வட்டாட்சியர்  .பாலசண்முகம்  , உதவி சுற்றுலா அலுவலர் பாஸ்கரன்   உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து