முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மே 16-ல் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகிறது

வியாழக்கிழமை, 10 மே 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை : பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வரும் 16-ம் தேதி வெளியாகிறது. இதற்கான பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.

அதிரடி மாற்றம்

தமிழக அரசு, பள்ளிக்கல்வித்துறையில் பல்வேறு அதிரடி மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை ரேங்க் முறையில் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் கிரேடு முறையில் வெளியிடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான பனிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வரும் 16-ம் தேதி வெளியாகிறது.

முழுவீச்சில்...

இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஏற்கனவே தெரிவித்திருந்தார். அதாவது, 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் 16-ம் தேதியும், 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 23-ம் தேதியும் வெளியாகும் என்றார். இதற்கான பணிகளில் பள்ளிக்கல்வித்துறை முழுவீச்சில் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை தேர்வு முடிவுகள் தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இணைய தளத்தில்...

அதில் கடந்த 1998-ம் ஆண்டு வரை தேர்வு முடிவுகள் பத்திரிக்கைகளில் வெளியிடப்பட்டன. மாவட்ட கல்வி அதிகாரி அலுவலகத்திற்கு தேர்வு முடிவுகளை தேர்வுத்துறை அனுப்பி வந்தது. தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் நாளன்று பள்ளிகளில் உள்ள விளம்பர பலகையில் முடிவுகள் ஒட்டப்படும். அவற்றை மாணவர்கள் பார்த்து வந்தனர். 2003-ம் ஆண்டு முதல் அந்த நிலை மாற்றப்பட்டு தேர்வுத்துறையின் இணையதளத்தில் முடிவுகள் வெளியிடப்பட்டன.

எஸ்.எம்.எஸ் மூலம்...

2015-ம் ஆண்டு முதல் தேர்வுத்துறை இணையதளத்தில் தற்காலிக சான்றிதழ் பதிவிறக்கம் செய்துகொள்ளும் முறையை பள்ளிக்கல்வித்துறை அறிமுகம் செய்தது. கடந்த ஆண்டு அரசு தேர்வுத்துறை 12 மற்றும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் அனைத்து மாணவர்களுக்கும் அவர்கள் கொடுத்த செல்போன் எண்களிலும் எஸ்.எம்.எஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டன. மேலும் தேர்வில் ரேங்க் அடிப்படையும் கைவிடப்பட்டது. அதாவது யார் முதல் என்று யாருக்கும் தெரியாது. அதனால் மாணவர்களின் மன உளைச்சல் தவிர்க்கப்பட்டது.  இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து