முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரஜினியை ஊதி கெடுத்து விட வேண்டாம்: ‘துக்ளக்’ ஆசிரியர் குருமூர்த்திக்கு அமைச்சர் ஜெயகுமார் அட்வைஸ்

வியாழக்கிழமை, 10 மே 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை : தமிழகத்தில் தலைமை வெற்றிடம் இருப்பதாக ‘துக்ளக்’ ஆசிரியர் குருமூர்த்தி தெரிவித்த கருத்துக்கு, பார்ப்பவர் கண்ணில் தான் கோளாறு என்று அமைச்சர் ஜெயகுமார் பதிலடி தெரிவித்துள்ளார். மேலும், சும்மா இருக்கும் சங்கை ஊதி கெடுத்தது போல் ரஜினியை ஊதி கெடுத்து விட வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளார்.

மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார், அப்போது அவர் கூறியதாவது:-

சும்மா இருக்கும் சங்கை ஊதிக்கெடுத்தானாம் ஆண்டி என்பதுபோல, ரஜினியை ஆடிட்டர்குரு மூர்த்தி ஊதிக்கெடுத்து விட வேண்டாம். தமிழக அரசியலில் வெற்றிடம் என்று குருமூர்த்தி கூறுகிறார். அது குறித்து பார்ப்பவர் கண்ணில் தான் கோளாறு எங்களை பொறுத்தவரை தமிழக அரசியலில் வெற்றிடம் என்பதே இல்லை. அ.தி.மு.க. சொன்னது அத்தனையும் செய்திருக்கிறது அ.தி.மு.க. அரசுக்கு செயல்பாடு என்று ஒன்று இருப்பதாக தெரியவில்லை. கர்நாடக தேர்தலிலும் அ.தி.மு.க.வின் கொள்கைகளை தான் ஜெயலலிதா அறிவித்துள்ளார். தமிழ்நாட்டை பொறுத்தவரை அ.தி.மு.க. தான் தேர்தலில் கோலாச்சும், கனவில் இருப்பவர்களுக்கெல்லாம் பதிலளிக்க முடியாது. அவர் ஆடிட்டர் வேலை பார்க்கவில்லை, அரசியல் வேலை பார்க்கிறார்.

பதிலளிக்க வேண்டும்

திருவண்ணாமலையில் மூதாட்டி கொல்லப்பட்டது ஏற்க முடியாத செயல் இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டனை வாங்கி கொடுப்பதே அரசின் கடமை. பொதுமக்கள் சட்டத்தை கையில் எடுத்து கொள்ள கூடாது. நதிகளை இணைப்பது தான் அ.தி.மு.க.வின் குறிக்கோள். இந்த கருத்தை அ.தி.மு.க. எப்போதோ கூறிவிட்டது. தென்னக நதிகள் இணைப்பு திட்டத்திற்கு ஒரு கோடி கொடுப்பதாக ரஜினி தெரிவித்தார். அதுப்பற்றி ரஜினி தான் பதிலளிக்க வேண்டும்.

தயாராக இருக்கிறோம்

உள்ளாட்சித்தேர்தலை கண்டு பயப்படும் இயக்கம் அ.தி.மு.க. இல்லை. உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தால் நாளையே உள்ளாட்சித்தேர்தலை நடத்த தயாராக இருக்கிறோம். தமிழக சட்டசபைக்கு 2021-ம் ஆண்டு தேர்தல் வரும். அதற்கு முன்பு ஒருபோதும் வராது. வெற்றி வந்தாலும், தோல்வி வந்தாலும் அரசியலில் தொடர்ந்து இருப்பேன் என்று நடிகர் கமல்ஹாசன் கூறியிருப்பது பற்றி கேட்டபோது கமல்ஹாசனுக்கு ஆரம்பத்திலேயே நம்பிக்கை இல்லை. இது அவநம்பிக்கை பேச்சை தான் காட்டுகிறது. அவருக்கு தோல்வியடைவோம் என்பது தெரிந்து விட்டது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து