முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

1, 6, 9, 11-ம் வகுப்புகளுக்கான புதிய பாடப்புத்தகங்கள் 23-ம் தேதி இணையதளத்தில் வெளியீடு

வெள்ளிக்கிழமை, 11 மே 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை: 1,6, 9 மற்றும் பிளஸ் 1 பாடப்புத்தகங்கள் வரும் 23-ம் தேதி இணையதளத்தில் வெளியிடப்படும் என்று கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நிபுணர் குழு...
தமிழகத்தில் 1 முதல் 12 வரை பாடத்திட்டங்கள் மாற்றியமைக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து ஓவ்வொரு வகுப்புகளின் பாடத்திட்டத்தை மாற்றுவதற்கு நிபுணர் குழு அமைக்கப்பட்டது. இந்த நிபுணர் குழுவினர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பாடத்திட்டத்தை முதல்வரிடம் வழங்கினர். இதைத்தொடர்ந்து பாடபுத்தகங்கள் அச்சிடும் பணி தொடங்கியது.

இணையதளத்தில்...
இதற்கிடையில் கடந்த 4-ம் தேதி 174 தலைப்புகளில் அழகு மிளிர வெளியிடப்பட்டுள்ள 1, 6, 9 மற்றும் பிளஸ் பாடபுத்தகங்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமை செயலகத்தில் வெளியிட்டார்.  இந்த நிலையில் புதிய பாடப்புத்தகங்கள் அனைத்தும் இணையதளத்தில் வெளியிட அரசு முடிவெடுத்துள்ளது. இதனை வரும் 23-ம் தேதி முதல் www.tnscert.org என்ற இணையதளத்தில் காணலாம் என்றும் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து