3 நாள் பரோல் முடிந்து மீண்டும் சிறைக்கு திரும்பினார் லல்லு

செவ்வாய்க்கிழமை, 15 மே 2018      இந்தியா
lalu prasad yadav 2017 8 4

ராஞ்சி : ராஷ்டிரிய ஜனதா தள தலைவரும், பீகார் முன்னாள் முதல்வருமான லல்லு பிரசாத் யாதவ் கால்நடை தீவன ஊழல் வழக்குகளில் தண்டனை பெற்று ராஞ்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

உடல்நலக் குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மீண்டும் ராஞ்சி சிறைக்கு திரும்பினார். இந்த நிலையில் லல்லுவின் மூத்த மகன் தேஜ்பிரதாப் காதல் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக 3 நாள் பரோலில் வந்தார். ராஞ்சி சிறையில் இருந்து பாட்னா வந்த அவர் 3 நாட்கள் மகன் திருமண நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். நேற்று முன்தினத்துடன் அவரது பரோல் முடிந்ததை தொடர்ந்து அவர் மாலையில் மீண்டும் ராஞ்சி சிறைக்கு திரும்பினார். இதற்கிடையே ஒரு கால்நடை தீவன ஊழல் வழக்கில் லல்லுவுக்கு 6 மாத ஜாமீன் கிடைத்துள்ளது. இதற்கான நடைமுறைகளை முடித்து கொண்டு அவர் வீடு திரும்புவார் என்று அவரது உதவியாளர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து