முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொடைக்கானலில் மலர்கண்காட்சி நிறைவு

ஞாயிற்றுக்கிழமை, 20 மே 2018      திண்டுக்கல்
Image Unavailable

கொடைக்கானல்- - கொடைக்கானலில் 57 வது மலர் கண்காட்சி நிறைவு பெற்றது.
 மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் 57 வது மலர் கண்காட்சியினை தமிழக முதல்வர் 19ம் தேதி காலை துவக்கி வைத்தார். இந்த மலர் கண்காட்சி நேற்று மாலையுடன் நிறைவடைந்தது.
 இந்த மலர் கண்காட்சியின் நிறைவை அடுத்து பரிசளிப்பு விழா நடந்தது. மலர் கண்காட்சியினை ஒட்டி பல வகையான போட்டிகள் தனியார் மற்றும் அரசுத் துறைகளுக்கு இடையே நடத்தப்பட்டது. மலர் தோட்டம், புல் வெளிகள், காய்கறி தோட்டம் உள்ளிட்ட பல வகைகளில் சிறந்தவற்றுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
இந்த பரிசளிப்பு விழாவிற்கு திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் டாக்டர் வினய் தலைமை தாங்கி பரிசுகள் வழங்கினார். இந்த விழாவில் கொடைக்கானல் ஆர்.டி.ஓ மோகன், தாசில்தார் பாஸ்யம், நகராட்சி கமிசனர் முருகேசன், தோட்டக்கலை துறை அலுவலர்கள், சுற்றுலாத்துறை அலுவலர்கள், கொடைக்கானல் பி.டி.ஓ. மகேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதில் 135 முதல் பரிசுகளும் 116 இரண்டாம் பரிசுகளும், 121 மூன்றாம் பரிசுகளும் , 129 ஆறுதல் பரிசுகளும் வழங்கப்பட்டது. 37 பேர்களுக்கு சுழற் கோப்பைகளும், வழங்கப்பட்டது. அரசுத் துறைகளுக்கு 14 பரிசுகள் வழங்கப்பட்டது. அரசுத்துறையில் அரசு போக்குவரத்துத் துறைக்கு முதல் பரிசு வழங்கப்பட்டது.
 முன்னதாக கொடைக்கானல் கோடை விழாவின் கலை நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக ஆண்கள் மற்றும் பெண்களுக்கான கயிறு இழுக்கும் போட்டி நடந்தது. இதனை அடுத்து மதியம் பிரையண்ட் பூங்காவில் சென்னை ஸ்ரீவித்யா நாடக மன்றம் வழங்கிய பல் சுவை நிகழ்ச்சிகள் நடந்தது. இதனை அடுத்து டாக்டர் உ~h குழுவினரின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடந்தது. நேற்றை நாளின் கடைசி நிகழ்ச்சியாக வெள்ளைப்பாண்டி குழுவினர் வழங்கிய தேவராட்டம் மற்றும் ஒயிலாட்ட நிழ்ச்சி நடந்தது.  கொடைக்கானலில் நேற்று மாலை சாரல் மழையுடன் 57வது மலர் கண்காட்சி நிறைவடைந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து