முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கர்நாடக அணைகளை வந்து பாருங்கள் - நடிகர் ரஜினிக்கு குமாரசாமி அழைப்பு

திங்கட்கிழமை, 21 மே 2018      இந்தியா
Image Unavailable

மைசூரு : காவிரியில் தண்ணீர் திறக்கக் கோரும் நடிகர் ரஜினி காந்த், கர்நாடகா வந்து அணைகளை பார்வையிட்டால், எங்கள் நிலைமையை புரிந்து கொள்வார் என கர்நாடக முதல்வராக பொறுப்பேற்கவுள்ள குமாரசாமி கூறியுள்ளார்.

கர்நாடக முதல்வராக பதவியேற்கவுள்ள நிலையில், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் மாநிலத் தலைவர் எச்.டி.குமாரசாமி, தனது சகோதரர் எச்.டி.ரேவண்ணாவுடன் திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலில் நேற்று முன்தினம் வழிபாடு நடத்தினார். இதை தொடர்ந்து கர்நாடக மாநிலம் ஹசனில் உள்ள கோயில்களில் நேற்று அவர் வழிபட்டார். 

பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த போது காவிரி விவகாரம் தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த் அளித்த பேட்டி குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு குமாரசாமி பதிலளித்ததாவது,

காவிரி விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவிக்கும் முன்பாக, நடிகர் ரஜினி காந்த் கர்நாடக மாநில அணைகளை பார்வையிட வேண்டும். கர்நாடக விவசாயிகளின் நிலைமையையும் அவர் தெரிந்து கொள்ள வேண்டும். கர்நாடக அணைகளில் தண்ணீர் இல்லை என்பதை அவர் புரிந்து கொள்வார் என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து