முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வறட்சியை கண்காணிக்க செயற்கை கோள்கள்:விண்ணில் செலுத்தியது நாசா

வியாழக்கிழமை, 24 மே 2018      உலகம்
Image Unavailable

வாஷிங்டன்: வறட்சி, பனிமலைகள் உருகுவது, கடலில் நீரின் அளவு அதிகரித்து வருவது ஆகியவற்றை கண்காணிப்பதற்காக 2 பிரத்யேக செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக நாஸா அமைப்பு விண்ணுக்கு செலுத்தியது.

நாசா அமைப்பும், ஜெர்மனி புவியியல் ஆய்வு மையமும் இணைந்து இந்தச் செயற்கைக் கோள்களை விண்ணுக்கு செலுத்தியுள்ளன.

அமெரிக்காவின் கலிபோர்னியா நகரில் உள்ள வான்டன்பெர்க் விமானப் படை மையத்தில் இருந்து ஸ்பேஸ்எஸ்க் பால்கான் 9 ரக ராக்கெட்டில் இந்த செயற்கைக்கோள்களுடன் மேலும் 5 தகவல்கள் தொடர்பு செயற்கைக்கோள்களும் விண்ணில் செலுத்தப்பட்டன.

இது குறித்து நாஸா அறிவியல் திட்ட இயக்குநரகத்தின் இணை நிர்வாகியான தாமஸ் ஸர்புசென் கூறுகையில், புவியில் ஏற்பட்டுவரும் வறட்சி, பனிமலைகள் உருகிவருவதல் உள்ளிட்டவற்றை கண்காணித்து செயற்கைக்கோள்கள் தகவல்களை அளிக்கும்' என்றார்.

செயற்கைக்கோள்களை சுமந்து சென்ற விண்கலன்களிலிருந்து சமிக்ஞைகள் வருவதாக நாஸா அதிகாரி ஒருவர் தெரிவித்தார். விண்வெளியில் இருந்து கிடைக்கப் பெறும் தகவல்களை 7 மாதங்களுக்கு பிறகு நாஸா வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து