முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நுங்கம்பாக்கம் டிரைலர்

சனிக்கிழமை, 26 மே 2018      சினிமா
Image Unavailable

சுவாதி கொலையை மையப்படுத்தி உருவாகி வரும் நுங்கம்பாக்கம் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் பேசிய படத்தின் இயக்குநர் ஒரு கொலையை படமாக்கிவிட்டு ஓடி ஒளிந்து கொண்டிருப்பதாக வருத்தத்துடன் தெரிவித்தார்.
 
சென்னை நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் பெண் என்ஜினீயர் சுவாதி கொலை செய்யப்பட்ட சம்பவம், திரைப்படமாக எடுக்கப்படுகிறது. ரமேஷ் செல்வன் இயக்கும் இந்த படத்தில் சுவாதி கதாபாத்திரத்தில் ஆயிரா நடித்துள்ளார். நுங்கம்பாக்கம் இன்ஸ்பெக்டர் வேடத்தில் அஜ்மல் நடிக்கிறார். ‘சுவாதி கொலை வழக்கு’ என முதலில் தலைப்பு வைக்கப்பட்டிருந்த நிலையில், படத்தின் பெயரை நுங்கம்பாக்கம் என படக்குழுவினர் மாற்றினர்.

இந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் நடிகர் விஷால், இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், இயக்குனர் விக்ரமன், அஜ்மல், சினேகன், கதிரேசன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

இதில் விஷால் பேசும் போது, இந்த படத்தின் முந்தைய டைட்டிலான சுவாதி கொலை வழக்கு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நான் கலந்து கொண்டேன்..ஒரு நிஜ சம்பவத்தை படமாக்கும் போது, அது சம்மந்தமான டைட்டில் வைப்பது தானே நியாயம். அப்புறம் எதுக்கு இப்போ நுங்கம்பாக்கம் என்று டைட்டிலை மாற்றினீர்கள், சென்சாருக்காகவா, இல்லை யாருடைய நெருக்குதலுக்காகவோ, டைட்டிலை மாற்றினீர்கள். ஏன் பயப்படனும், இந்த படத்திற்கு மக்கள் மத்தியில் ஒரு எதிர்பார்ப்பு இருக்கு, அதே எதிர்பார்ப்பு எனக்கும் இருக்கு.என்னோட இரும்புத்திரை படத்துக்கு போராட்டம் நடத்தி இரண்டு காட்சிகளை கேன்சல் செய்த கொடுமையையும் சந்தித்தேன்.
டிஜிட்டல் இந்தியா ஆதார் கார்டு பற்றி சொல்லப்பட்டதால் நானும் பிரச்சனையை சந்தித்தேன். பிரச்சனையை சந்திப்போம் என்றார்

படத்தின் இயக்குனர் எஸ்.டி.ரமேஷ் செல்வன் பேசும் போது...ஒரு கொலை பற்றிய கதையை படமாக எடுத்துவிட்டு நான் ஊர் ஊராக ஓடி ஒளிய வேண்டியதாகிவிட்டது. ஜெயிலுக்கு மட்டும் தான் போகல.. அந்தளவுக்கு பிரச்சனைகளை சந்தித்து விட்டேன்.எனக்கு வேற வேலை தெரியாது, சினிமா மட்டும் தான் தெரியும். அதுக்காக தான் போராடிக் கொண்டிருக்கிறேன் நிச்சயம் நுங்கம்பாக்கம் நல்ல படமாக வரும் என்றார்.

இதில் எஸ்.ஏ.சந்திரசேகர் பேசும் போது, ஆரம்பகாலத்தில் என்னுடைய எல்லா படங்களுமே பல பிரச்சனைகளை தாண்டியே ரிலீசானது. எனினும் நான் தலைப்பை மாற்றவில்லை, மாற்றக்கூடாது என்று உறுதியாக இருந்தேன். ரிலீஸ் தேதியை வைத்துக் கொண்டு அவர்களுக்கு பயந்து போய் நாம் மாற்றுகிறோம். ஏதாவது ஒரு அமைப்பு இதை படமாக எடுக்கக் கூடாது என்று கூறுகிறார்கள். நாட்டில் நடப்பதை தான் நாங்கள் பேசுகிறோம். காமராஜர் காலத்தில் உழைப்பதற்காக அரசியலுக்கு வந்தார்கள். அத்தனை அரசியல்வாதிகளும் சம்பாதிக்கவே இன்று அரசியலுக்கு வருகிறார்கள். இதை சினிமாவில் காட்டுவது தப்பா. படத்தில் இதை காட்டினால் என்ன செய்வார்கள்.

என்ன தான் போய்விடும், கடைசியில் உயிர்தான் போகும், உயிர் போனால் 4 பேரால் பேசப்படும்.அந்த கொலை வழக்கு தான் இந்த படம் என்பதை, எப்படி மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பீர்கள். எதையும் தைரியமாக செய்யுங்கள். என்றார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து