முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு நிவாரண தொகை ரூ. 20 லட்சமாக உயர்வு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

ஞாயிற்றுக்கிழமை, 27 மே 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை: தூத்துக்குடியில் துப்பா்க்கிச்சூடு சம்பவத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு நிவாரணத் தொகை ரூ 20 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. படுகாயமடைந்தவர்களுக்கான நிதி உதவி 3 லட்சத்தில் இருந்து 5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
 
இது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை மூடக் கோரி, மாவட்ட ஆட்சியர் அலுவலக முற்றுகைப் போராட்டத்தில் ஏற்பட்ட கலவரத்தின் போது, தவிர்க்க முடியாத சூழலில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் துரதிஷ்டவசமாக 13 நபர்கள் உயிரிழந்தது எனக்கு மிகவும் துயரமும், மன வேதனையும் அளித்தது. கடந்த 22.5.2018 அன்று உயிரிழந்த நபர்களுக்கு தலா பத்து லட்சம் ரூபாய் வழங்க நான் ஆணையிட்டேன்.
தூத்துக்குடிமாவட்டத்தில் இயல்பு நிலை திரும்புவதற்காக நியமிக்கப்பட்ட மூத்த  ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அங்கே சென்று உயிரிழந்த குடும்பத்தினர் மற்றும் காயமடைந்தோரை சந்தித்த போது, அவர்கள் நிவாரண நிதியுதவியை உயர்த்தி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தனர். அதன் அடிப்படையிலும், நிவாரண நிதியை உயர்த்தி வழங்க கோரும் மனுதாரரின் கோரிக்கையை பரிசீலிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை  25.5.2018 அன்று உத்தரவிட்டுள்ளதையும், பல்வேறு தரப்பிலிருந்து அரசுக்கு கிடைக்கப் பெற்ற கோரிக்கைகளையும், தமிழ்நாடு அரசு பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டது.

இதன் அடிப்படையில், துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்ட, 10 லட்சம் ரூபாய் நிவாரண உதவியை உயர்த்தி, 20 லட்சம் ரூபாய் நிவாரண உதவி வழங்கவும், துப்பாக்கி சூட்டில் பலத்த காயமடைந்தவர்களுக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 3 லட்சம் ரூபாயை, 5 லட்சம் ரூபாயாக உயர்த்தியும், லேசான காயமடைந்தவர்களுக்கு ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட ஒரு லட்சம் ரூபாயை, ஒன்றரை லட்சம் ரூபாயாக உயர்த்தியும், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அந்த அறிக்கையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 4 days ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 4 weeks ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 3 weeks ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து