முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கர்நாடகாவில் 130 தியேட்டர்களில் காலா திரைப்படம் வெளியாகிறது

புதன்கிழமை, 6 ஜூன் 2018      சினிமா
Image Unavailable

பெங்களூர்: ரஜினி நடிப்பில் உருவாகி இன்று திரைக்கு வரவிருக்கும் காலா’ பாடத்திற்கு கர்நாடகாவில் எழுந்த  சிக்கல் தீர்ந்து, அங்கு 130-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் இந்த திரைப்படம் வெளியாக உள்ளது.

ஐகோர்ட்டில் மனு
ரஜினியின் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் காலா. காவிரி விவகாரத்தில் தமிழகத்திற்கு ஆதரவாக ரஜினி பேசியதால், காலா படத்தை கர்நாடகாவில் வெளியிடக் கூடாது என்று கன்னட அமைப்புகள் போர்க்கொடி தூக்கின. காலா’ பட தயாரிப்பு நிறுவனம் வொண்டர்பார் கர்நாடக ஐகோர்ட்டில் ஒரு மனுவை தாக்கல் செய்தது. அதில் காலா படம் வருகிற 7-ந் தேதி கர்நாடகத்தில் வெளியாவதாகவும், அதற்கு இங்குள்ள சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருவதாகவும், எனவே, காலா படத்திற்கு உரிய பாதுகாப்பு வழங்க மாநில அரசுக்கு உத்தரவிடுமாறு மனுவில் கோரப்பட்டு இருந்தது.

நிபந்தனை
காலா படம் வெளியாகும் போது கர்நாடக தியேட்டர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று படத்தின் தயாரிப்பாளரான தனுஷ் தொடர்ந்த வழக்கில் கர்நாடக அரசுக்கு அம்மாநில உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  காலா படம் திரையிடுமாறு யாரையும் கட்டாயப்படுத்த முடியாது என்றும் கர்நாடக உயர்நீதிமன்றம் தெரிவித்தது. காலா படம் நாளை உலகம் முழுவதும் வெளியாக உள்ள நிலையில்,  கர்நாடக திரைப்பட வர்த்தக சபை தலைவர் சாரா கோவிந்த், காவிரி மேலாண்மை ஆணையம் வேண்டாம் என ரஜினிகாந்த் தெரிவிக்க வேண்டும், காவிரி விவகாரத்தில் இரு மாநில அரசுகள் - விவசாயிகள் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என ரஜினிகாந்த் கூற வேண்டும் என நிபந்தனை விதித்தார்.

ஆதரிக்க கோரிக்கை
இந்நிலையில் ரஜினிகாந்த் நேற்று செய்தியாளர்களை சந்தித்து, காலா படத்தை கன்னட அமைப்புகள் எதிர்ப்பது சரியல்ல. காலா பட விவகாரம் தொடர்பாக கன்னட அமைப்புகள் என்னை வந்து சந்திக்கலாம். காவிரி மேலாண்மை பிரச்சனையில் தீர்ப்பு என்ன இருக்கோ அதை செயல் படுத்த சொன்னேன். அதில் என்ன தவறு.  காலா எதிர்ப்புக்கு கர்நாடக வர்த்தக சபையே உறுதுணையாக இருப்பது ஆச்சரியம் அளிக்கிறது. படத்தை பிரச்னையின்றி வெளியிடுவதுதான் வர்த்தக சபையின் வேலை. காலாவை கர்நாடகாவில் மட்டும் வீம்புக்காக ரிலீஸ் செய்யவில்லை; உலகம் முழுவதும் ரிலீஸ் செய்கிறோம். காலா படம் வெளியாகும் திரையரங்குகளுக்கு முதலமைச்சர் குமாரசாமி பாதுகாப்பு தருவார் என நம்பிக்கை உள்ளது. கன்னட மக்கள் காலா படத்தை ஆதரிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் காலா படத்தை கர்நாடகாவில் சி நிறுவனம் வெளியிட இருப்பதாக அறிவித்திருக்கிறார்கள். மேலும் கர்நாடகாவில் 130 தியேட்டர்களில் வெளியிட திட்டம் இருப்பதாகவும் சி நிறுவன உரிமையாளர் கனகபுரா சீனிவாஸ் அறிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து