முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நீதித்துறை நியமன விவகாரம்: காங்கிரஸ் பெரிதாக்குவதாக அருண் ஜெட்லி குற்றச்சாட்டு

திங்கட்கிழமை, 11 ஜூன் 2018      இந்தியா
Image Unavailable

மும்பை : நீதித்துறை நியமன விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி பெரிதாக்குவதாக அருண் ஜெட்லி குற்றம் சாட்டியுள்ளார்.

உத்தரகண்ட் மாநில உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கே.எம்.ஜோசப்பை உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்குமாறு கொலீஜியம் குழு அனுப்பி வைத்த பரிந்துரையை, மறுபரிசீலனை செய்யுமாறு மத்திய அரசு அண்மையில் திருப்பி அனுப்பியது.

ஜோசப்பின் பெயரை மீண்டும் பரிந்துரை செய்யலாம் என கொலீஜியம் குழு முடிவு செய்துள்ள போதிலும், அதுகுறித்து இதுவரை மத்திய அரசை அணுகவில்லை.

இந்தச் சூழலில், முகநூலில் அருண் ஜெட்லி வெளியிட்ட பதிவுகளில் கூறப்பட்டிருப்பதாவது:

கொலீஜியம் குழுவின் பரிந்துரையை மறுபரிசீலனை செய்யுமாறு மத்திய அரசு திருப்பி அனுப்பிய விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியில் உள்ள எனது நண்பர்கள் சிலர் கூக்குரல் எழுப்புகிறார்கள். அவர்களுக்கு மறதி அதிகம்.
காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது, மும்பை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த எஸ்.பி.கோட்வால் மற்றும் கேரள உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.எஸ்.மேனன் ஆகியோரை உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க கொலீஜியம் குழு பரிந்துரை செய்தது. ஆனால், அப்போதைய அரசு இந்த இருவரது பெயர்களை ஏற்காமல், பரிந்துரையை புறம்தள்ளியது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி இதயத்துல்லா மிக அடக்கமாக பரிந்துரை செய்ததோடு சரி. அதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படாதது குறித்து ஒருபோதும் கேள்வி எழுப்பவில்லை என்று ஜெட்லியின் பதிவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து