முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புற்று நோய்: அமெரிக்காவில் தலாய்லாமாவுக்கு சிகிச்சை?

செவ்வாய்க்கிழமை, 12 ஜூன் 2018      உலகம்
Image Unavailable

வாஷிங்டன்: தலாய்லாமாவுக்கு புற்றுநோய் பாதித்து, அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வரும் தலாய்லாமாவின் உடல்நிலையில் முன்னேற்றம் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலாய்லாமாவின் உடல்நிலை மற்றும் நோய் குறித்த தகவல்கள் இந்திய அரசுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், சீன அரசுக்கு தற்போது தான் இந்த தகவல் தெரிய வந்திருப்பதாக தி குவெண்ட் என்ற அமெரிக்க நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. அதே சமயம், தலாய் லாமாவுக்கு புற்றுநோய் ஏற்பட்டிருப்பதாக வெளியாகும் செய்திகளை திபெத்திய மத்திய நிர்வாகம் மறுத்துள்ளது.

வயோதிகம் காரணமாகவே, அவரது பொதுமக்களுடனான சந்திப்புகளும், பயணங்களும் குறைக்கப்பட்டிருப்பதாகவும், அச்சுறுத்தும் எந்த நோயும் தாக்கப்படவில்லை என்றும் திபெத்திய நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஆனால், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே தலாய் லாமாவுக்கு புரோஸ்டேட் புற்றுநோய் தாக்கி, தற்போது மயோ கிளினிக்கில் புரோடான் பீம் தெரபி சிகிச்சை பெற்று வருகிறார். அவரது புற்றுநோய் இதர பகுதிகளுக்கும் பரவி, சரி செய்ய முடியாத நிலையில் இருப்பதாகவும் அமெரிக்காவில் வெளியாகும் நாளிதழ்களில் செய்தி வெளியாகியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து