முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் இளைஞர்களை மோடி ஏமாற்றி விட்டார் ராகுல் காந்தி கடும் தாக்கு

புதன்கிழமை, 13 ஜூன் 2018      இந்தியா
Image Unavailable

மும்பை: கடந்த பாராளுமன்ற தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் இளைஞர்களை பிரதமர் மோடி ஏமாற்றி விட்டார் என ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

மும்பையில் நேற்று நடைபெற்ற காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது, கடந்த பாராளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது ஆண்டுக்கு இரண்டு கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்குவேம் என பிரதமர் நரேந்திர மோடி வாக்குறுதி அளித்தார். ஆனால், தற்போது அவர் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் இளைஞர்களை ஏமாற்றி விட்டார். 

சீனா, ஒவ்வொறு 24 மணி நேரத்திற்கும் 50 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தி தருகிறது. ஆனால், இந்தியாவோ வெறும் 450 இளைஞர்களுக்கு மட்டுமே வேலைவாய்ப்பினை வழங்குகிறது. கடந்த 8 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளதாக பா.ஜ.க மந்திரி ஒருவரே தெரிவித்துள்ளார்.

பா.ஜ.க  தலைமையிலான அரசு, 10 முதல் 15 பணக்கார நபர்கள் வங்கிகளுக்கு செலுத்த வேண்டிய கடனான ரூ.2.5 லட்சம் கோடியை வாராக்கடனாக தள்ளுபடி செய்துள்ளது. அதே நேரத்தில், விவசாயிகள் தங்களின் வாழ்வாதாரத்திற்காக கேட்கும் விவசாயக் கடன் தள்ளுபடியை இந்த அரசு புறக்கணித்துள்ளது.  நமது நாட்டின் விவசாயிகளுக்கு தேவையான உதவிகளை இந்த அரசு செய்தால் போதும், அவர்கள் சீனாவுடன் போட்டி போடுவார்கள். இவ்வாறு ராகுல் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து