அம்பத்தூரில் விரைவில் நவீன பாலகம்: சட்டசபையில் அமைச்சர் தகவல்

புதன்கிழமை, 13 ஜூன் 2018      தமிழகம்
TN assembly 2017 07 01

சென்னை, அம்பத்தூர் பால்பண்ணை வாயிலில் நவீன பாலகம் சட்டப்பேரவை முடித்தவுடன் திறக்கப்படும் என பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தெரிவித்தார்.

தமிழக சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின் போது அம்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அலெக்சாண்டர் கேட்டிருந்த கேள்விக்கு, பதிலளித்து பேசிய பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, அம்பத்தூர் தொகுதியில் உள்ள அம்பத்தூர் பால்பண்ணை வாயிலில் ரூ.70 லட்சம் செலவில் நவீனப்பாலகம் மாற்றப்படுவதற்கான பணிகள் முடிக்கப்பட்டு திறப்பட உள்ளது. சட்டப்பேரவை கூட்டத் தொடர் முடிந்த உடன் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி திறந்து வைப்பார் என தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து